அய்மான் செயலாளர் காயல்பட்டினம் எஸ் ஏ சி ஹமீத், அய்மான் மார்க்கத்துறைச் செயலாளர் காயல்பட்டினம் ஹபீப் ரஹ்மான் ஆலிம், அபுதபி அமீரகக் காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர் லால்பேட்டை அப்துற்றஹ்மான், ஒருங்கிணைப்பாளர் ஆவை அன்சாரி, அதிரை கவியன்பன் கலாம், லால்பேட்டை அப்துற்றஹ்மான், திருச்சி அய்மான் கல்லூரி நிர்வாகி கீழக்கரை ஜாஃபர் மற்றும் அய்மான் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மார்க்கத்துறைச் செயலாளர் ஹபீர் ரஹ்மான் ஆலிம் அவர்களின் கிரா அத் மற்றும் அறிமுக உரையுடன் துவங்கி, தலைமை உரையில் அய்மான் தலைவர் அதிரை ஷாஹுல் ஹமித் தனது தலைமையுரையை நிகழ்த்தினார்கள். கேட்கப்பட்ட ஐயங்கட்கு உரிய தெளிவுரையும் வழங்கினார்கள். மேலும், வினாக்களுக்கான விரிவான விடைகளை “ஸ்கைப்” வழியாக இந்தியாவிலிருந்து தமிழகம் முழுவதும் பைத்துல் மால்களை உருவாக்கி வரும் சகோதரர் ஹிதாயத்துல்லாஹ் அவர்களிடமும் விளக்கமாகப் பெறப்பட்டன. அய்மான் ட்ரஸ்ட், தமிழகத்தின் அனைத்து பைத்துல் மால்கள் மற்றும் பயனாளர்களுக்கான ஒப்பந்தம் பற்றிய விளக்கங்களும் தெளிவு பெறப்பட்டன. முதற்கட்டமாக முன்பு ஒப்புக் கொண்ட 15 பேர்களும் நிதியுதவியைத் துவக்கமாக அளித்து அல்லாஹ்வின் நாட்டப்படி விரைவாக இத்திட்டம் செயல்பாட்டில் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது, இறுதியாகத் துஆவுடன் இனிதே நிறைவேறியது.
தகவல்: அதிரை கவியன்பன் கலாம்
ஜஸாக்கல்லாஹ் கைரன் வ ஆஃபியா
ReplyDelete