.

Pages

Monday, June 16, 2014

அதிரையில் மனநலம் பாதித்த பெண்ணுக்கு திடீர் பிரசவம் ! [ படங்கள் இணைப்பு ]

அதிரையில் மனநலம் பாதிப்படைந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த இரண்டு மாதங்களாக அதிரை பகுதிகளில் சுற்றி திரிந்தார். கர்ப்பமாக இருந்து வந்துள்ளார். நேற்று அரசு உயர் நிலை பள்ளி எதிரே அமைந்துள்ள நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான பயணியர் தங்கும் விடுதியின் புதிய கட்டிடத்தில் மனநிலை பாதித்த பெண் பலத்த சப்தத்துடன் அழுதுகொண்டு இருந்துள்ளார். அழும் குரலை கேட்ட  ( 1 ம் நம்பர் ) அரசு உயர்நிலை பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் கரோலின் , ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ( 2 ம் நம்பர் ) ஆசிரியைகள் அருள் ஜோதி, சுப்பு லட்சுமி சத்துணவு பொறுப்பாளர் கிளாரா, ஜீவா ஆகியோர் விரைந்து சென்று வலியால் துடித்து கொண்டிருக்கும் மனநிலை பாதித்த பெண்ணுக்கு முதலுதவி செய்துள்ளனர். பிரசவ வலியால் துடிப்பதை அறிந்து கொண்ட இவர்கள்  108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ செவிலியர்கள் வள்ளி மற்றும் அதிரை செட்டிதோப்பு காலனியை சேர்ந்த செவிலியர் சுகன்யா ஆகியோர் பிரசவம் பார்த்தனர். பிரசவத்தில் மனநலம் பாதித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை சத்து குறைந்தும், எடை குறைவாகவும் காணப்பட்டதால் தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டது. மனநிலை பாதித்த பெண் மற்றும் அவரது குழந்தை அதிரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.










  

8 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. மனநலம் பாதிக்கப் பட்ட இப்பெண்ணுக்கும் அந்தப்பச்சிளம் குழந்தைக்கும் பாதுகாப்பளித்து அரசு காப்பகத்திலோ அல்லது வேறு பாதுகாப்பான இடத்தில் ஒப்படைக்க சமூக ஆர்வலர்கள் முன்வந்து மனிதாபிமான அடிப்படையில் உதவிசெய்தால் அந்த தாய்க்கும் குழந்தைக்கும் பேருதவியாக இருக்கும்

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    மனநலம் பாதிக்கப் பட்ட இப்பெண்ணுக்கும் அந்தப்பச்சிளம் குழந்தைக்கும் பாதுகாப்பளித்து அரசு காப்பகத்திலோ அல்லது வேறு பாதுகாப்பான இடத்தில் ஒப்படைக்க சமூக ஆர்வலர்கள் முன்வந்து மனிதாபிமான அடிப்படையில் உதவிசெய்தால் அந்த தாய்க்கும் குழந்தைக்கும் பேருதவியாக இருக்கும்

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  4. மனநலம் பாதிக்கப் பட்ட இப்பெண்ணுக்கும்

    மனநலம் பாதிக்கப் பட்ட இப்பெண்ணுக்கும் அந்தப்பச்சிளம் குழந்தைக்கும் பாதுகாப்பளித்து அரசு காப்பகத்திலோ அல்லது வேறு பாதுகாப்பான இடத்தில் ஒப்படைக்க சமூக ஆர்வலர்கள் முன்வந்து மனிதாபிமான அடிப்படையில் உதவிசெய்தால் அந்த தாய்க்கும் குழந்தைக்கும் பேருதவியாக இருக்கும்

    ReplyDelete
  5. யாரை தான் இவனுங்க விட்டானுங்க! நல்ல மனநிலையில் இருப்பவர்களை ஏமாற்றும் இந்தக்காலத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை சொல்லவாவேண்டும்,

    இந்நிலைமைக்கு ஆளாக்கிய அந்த புள்ளி ராஜாவை எப்படி கண்டுப்பிடிப்பது? அந்த பட்ச மன்னுவின் நிலைமை?

    அவனை பெற்றடுதவளும் ஒரு பெண் தானே! சிந்தித்தானா ?

    தாயும் - சேயும் பாதுகாக்க தாயுள்ளம் கொண்டவர்கள் தான் முன்வரவேண்டும்.

    ReplyDelete
  6. கூட பொறந்த சகோதரி அல்லது தன்னுடைய தாயையோ அந்த படுபாவி இப்படி ஒறு காரியத்தை செய்திருப்பானா. ரொம்ப மனசு வலிக்குதுங்க

    ReplyDelete
  7. கூட பொறந்த சகோதரி அல்லது தன்னுடைய தாயையோ அந்த படுபாவி இப்படி ஒறு காரியத்தை செய்திருப்பானா. ரொம்ப மனசு வலிக்குதுங்க அன்புடன் ஜம் ஜம் அஸ்ரப்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.