எதிர் வரும் ரமலான் மாதத்தில் செய்ய வேண்டிய பணிகள் பற்றிய ஆலோசனைக்கூட்டம் அதிரை தவ்ஹீத் பள்ளியில் ( 10-6-2014 ) கிளைத்தலைவர் பீர்முகம்மது தலைமையில் நடைபெற்றது. இதில் கீழ்கண்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன
1 விலைவாசிகள் அதிகமான இருப்பதால் இந்த வருடம் கஞ்சிக்கு ரூ 6000 என்று தீர்மானிக்கப்பட்டது அதற்கு பெறுப்பாளராக சகோதரர் S P பக்கீர் முகம்மது அவர்களை நியமிக்கப்பட்டுள்ளது
2 இஷா தொழுகை 8.30 மணிக்கு இரவு தொழுகை 8.45 மணிக்கு தொழுகைக்கு பிறகு பயான் 30 நிமிடங்கள் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது
3 சென்ற வருடங்களை போல் இந்த வருடமும் ஸஹர் பாங்கு சொல்லுவது
4 பெண்களுக்கும் பள்ளியிலேயே இரவு தொழுகை நடத்துவது
5 ஸஹர் உணவு தேவைப்படுபவர்களுக்கு ஏற்பாடு செய்வது
6 அதிகமான பெண்கள் கலந்துக்கொள்ளுவதாக
இருந்தால் காலை 11.30 மணி முதல் 12.30 மணிவரை அயிஷா மகளிர் அரங்கில் பெண்களுக்கு பயான் நடத்துவது
ரமலான் மாதத்தில் பள்ளியில் நடைபெறும் பணிகளில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக்கொண்டு ஒத்துழைப்பு தருவது என்றும் முடிவு செய்யப்பட்டது
கஞ்சி மற்றும் இதர பணிகளுக்கு பணம் தருபவர்கள் இந்த நம்பரை தொடர்பு கொள்ளுங்கள் 99448 24510 - 95008 21430
தகவல் : M.I. அப்துல் ஜப்பார்
1 விலைவாசிகள் அதிகமான இருப்பதால் இந்த வருடம் கஞ்சிக்கு ரூ 6000 என்று தீர்மானிக்கப்பட்டது அதற்கு பெறுப்பாளராக சகோதரர் S P பக்கீர் முகம்மது அவர்களை நியமிக்கப்பட்டுள்ளது
2 இஷா தொழுகை 8.30 மணிக்கு இரவு தொழுகை 8.45 மணிக்கு தொழுகைக்கு பிறகு பயான் 30 நிமிடங்கள் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது
3 சென்ற வருடங்களை போல் இந்த வருடமும் ஸஹர் பாங்கு சொல்லுவது
4 பெண்களுக்கும் பள்ளியிலேயே இரவு தொழுகை நடத்துவது
5 ஸஹர் உணவு தேவைப்படுபவர்களுக்கு ஏற்பாடு செய்வது
6 அதிகமான பெண்கள் கலந்துக்கொள்ளுவதாக
இருந்தால் காலை 11.30 மணி முதல் 12.30 மணிவரை அயிஷா மகளிர் அரங்கில் பெண்களுக்கு பயான் நடத்துவது
ரமலான் மாதத்தில் பள்ளியில் நடைபெறும் பணிகளில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக்கொண்டு ஒத்துழைப்பு தருவது என்றும் முடிவு செய்யப்பட்டது
கஞ்சி மற்றும் இதர பணிகளுக்கு பணம் தருபவர்கள் இந்த நம்பரை தொடர்பு கொள்ளுங்கள் 99448 24510 - 95008 21430
தகவல் : M.I. அப்துல் ஜப்பார்
TNTJ வின் ரமலான் மாத பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் ......இருப்பினும் சஹர் பாங்கு எல்லாம் சொல்லி ஊர் மக்களை இது சஹரா அல்லது சுப்ஹா என்ற குழப்பத்தில் ஆளாக்க வேண்டாம் .....
ReplyDeleteசஹர் பாங்கு எல்லாம் சொல்லி ஊர் மக்களை இது சஹரா அல்லது சுப்ஹா என்ற குழப்பத்தில் ஆளாக்க வேண்டாம் ..... இது சரியான செய்தி.... குழப்பம்தான் வறும்...
ReplyDeleteநபி வழியை கேலி செய்வோர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!
ReplyDeleteசஹர் பாங்கு நபி வழியா?
புது வழியா??
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் சஹர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் பாங்கு உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில் அவர் இரவிலேயே பாங்கு சொல்வது உங்களில் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருப்போர் திரும்பி வருவதற்காகவும், உங்களில் தூங்கிக் கொண்டிருப்போரை உணர்த்துவதற் காகவும் தான். ஃபஜ்ர் அல்லது சுப்ஹு நேரம் வந்து விட்டது என்பதை அறிவிப்பதற்காக அல்ல.
அறிவிப்பவர்:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி 621
இது ஷரீஅத் வரைபடத்தில் உள்ள வணக்க வழிபாடாகும். ஆனால் இந்த வழிபாடு சமுதாயத்தில் இல்லை. தவ்ஹீத் ஜமாஅத் தான் தமிழக இஸ்லாமிய வரலாற்றிலேயே பள்ளிவாசல்களில் ஸஹர் பாங்கை அறிமுகப்படுத்தி, ரமளான் மாதத்தை நபி (ஸல்) அவர்கள் காலத்தில் உள்ளது போன்று உயிர்ப்பித்துக் கொண்டு இருக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் சஹர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் பாங்கு உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில் அவர் இரவிலேயே பாங்கு சொல்வது உங்களில் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருப்போர் திரும்பி வருவதற்காகவும், உங்களில் தூங்கிக் கொண்டிருப்போரை உணர்த்துவதற் காகவும் தான். ஃபஜ்ர் அல்லது சுப்ஹு நேரம் வந்து விட்டது என்பதை அறிவிப்பதற்காக அல்ல.
Deleteஅறிவிப்பவர்:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி 621
அஸ்தஹ்பிருல்லாஹ்....
ReplyDeleteசஹர் பாங்கு..கூருவது நபி வழி என்று...எனக்கு தெரியாது...தெரிந்து இருந்தால் அந்த கருத்தை வெளியிடாமல் இருந்திர்பேன்....
மற்றும் நான் கேலி செய்ய வில்லை......
யா அல்லாஹ் என்னை மன்னிப்பாயாக.....
//நபி வழியை கேலி செய்வோர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!//
ReplyDeleteஓர் இறை கொள்கையை ஏற்றுகொள்ளும் அனைவர்களும் தவ்ஹீத் வாதிகளே ....
அப்படிஎன்றால் உங்களின் கட்சித்தாவல் வழியை பின்பற்றாத முஸ்லிம்கள் அனைவர்களும் தவ்ஹீத் வாதிகள் இல்லையா ?
அமல்களில் சிறந்தது தொழுகை அதை ஏன் குறைத்து தொழ சொல்கின்றீர்கள் ?????
ஜகாத்தை வருடம் ஒருமுறை கொடுத்தால் போதும் என்றீர்களே இது நபி வழியா ???
அபூபக்கர் பாய்,
Deleteஅஸ்ஸலாமு அலைக்கும்.
//இருப்பினும் சஹர் பாங்கு எல்லாம் சொல்லி ஊர் மக்களை இது சஹரா அல்லது சுப்ஹா என்ற குழப்பத்தில் ஆளாக்க வேண்டாம் .....//
நபிவழியான ஸஹர் பாங்கை குழப்பம் என்றீர்கள். அது நபி வழி தான் என்று ஹதீஸ்களை எடுத்துக்காட்டிய பின்னர் நீங்கள் கட்சி (தலைப்பு) தாவியுள்ளீர்கள். இப்போது சொல்லுங்கள் ஸஹர் பாங்கு நபிவழியா? குழப்பமா?
//ஓர் இறை கொள்கையை ஏற்றுகொள்ளும் அனைவர்களும் தவ்ஹீத் வாதிகளே ....//
ஒர் இறை கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டும் தவ்ஹீத்வாதியாக ஆகிவிட முடியாது. அதை சரியாக செயல்படுத்த வேண்டும். தவ்ஹீத் கொள்கை ஏற்றுக்கொண்டு விட்டு, அவ்லியாகளுக்கு சக்தி உண்டு என்று நம்பினால் அவர் தவ்ஹீத்வாதியா? இப்படி தவ்ஹீத்வாதி என்று முடிவு செய்தால், அபுஜஹல் கூட தவ்ஹீத்வாதி என்றாகிவிடும்.
//அப்படிஎன்றால் உங்களின் கட்சித்தாவல் வழியை பின்பற்றாத முஸ்லிம்கள் அனைவர்களும் தவ்ஹீத் வாதிகள் இல்லையா ?//
தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் ஒருவர் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயலை செய்தால், அவருக்கும் மற்ற இணைவைப்பாளர்களுக்கும் வித்தியாசம் இல்லை. தவ்ஹீத் ஜமாஅத்தில் இல்லாத ஒருவர் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையான தவ்ஹீதை சரியாக பின்பற்றினால், அவரும் தவ்ஹீத்வாதிதான்.
//அமல்களில் சிறந்தது தொழுகை அதை ஏன் குறைத்து தொழ சொல்கின்றீர்கள் ?????//
அமல்களில் சிறந்தது தொழுகை என்பதற்காக இஷா தொழுகை 10 ரக்ஆத்துகளாக தொழாமா? தொழலாம் என்றால் ஏன் தொழலாம்? தொழக்கூடாது என்றால் ஏன் தொழக்கூடாது? இதற்கு நீங்கள் விளக்கம் தாருங்கள், பின்னர் நான் உங்களின் கேள்விக்கு விளக்கம் தருகிறோன், இன்ஷா அல்லாஹ்.
//ஜகாத்தை வருடம் ஒருமுறை கொடுத்தால் போதும் என்றீர்களே இது நபி வழியா ???//
தவ்ஹீத் ஜமாஅத் கொடுத்த பொருளுக்கு வருட வருடம் ஜக்காத் கொடுக்க வேண்டியது இல்லை என்று தான் சொல்லுகிறது. உங்கள் கேள்வியே தவறாக உள்ளது, நீங்கள் ஏற்று இருக்கும் ஆலிம்களும் வருடம் ஒரு முறை தானே ஜக்காத் கொடுக்க சொல்லுகிறார்கள்.
என்ன கேள்வி என்பதை தெளிவாக விளக்கம் தாருங்கள் சகோதரா
//Anwar 12 June 2014 16:31//
ReplyDeleteஅன்வர் பாய் Profile ID இல்லாத Unknwon person களுடன் வேண்டாவாதம் செய்ய நான் தயாராக இல்லை . இஷா தொழகைக்கு 10 ரக்காத் என்று உங்கள் தலைவர் சொன்னால் அதை செய்பவர்களும் உங்கள் கூட்டம் தான் .
அப்படி போடு....
Deleteநான் என்ன உங்கள் வீட்டில் பெண்ணா கேட்டேன்? கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை என்பதால் இப்படி தப்பித்து கேவலப்பட்டுள்ளீர்கள். அடுத்த முறை இப்படி மாட்டிக்கொண்டு ஓடும் போது நல்ல காரணமா சொல்லுங்க.
நீங்கள் இந்த காரணத்தை தப்பிக்க தான் சொல்லுகிறீர்கள் என்பதற்கு நீங்களே ஒரு ஆதாரத்தை தந்துள்ளீர்கள். M. அப்துர் ரஹ்மான் என்பரின் வரியில் இருந்து பின்வரும் வரியை எடுத்து தான் கேள்வி எழுப்பினீர்கள்:
Aboobakkar, Can.12 June 2014 14:30
//நபி வழியை கேலி செய்வோர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!//
இந்த M. அப்துர் ரஹ்மான் ஐடியை கிழிக்கு செய்தாலும் Unknown என்று தான் வருகிறது.
பதில் இல்லாவிட்டால் இப்படி தான் ஒடனும் அபூபக்கர் பாய். நபிவழியை குழப்பம் என்று சொல்லும் உங்களை போன்றவர்களுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்டுவானாக.
Delete//பதில் இல்லாவிட்டால் இப்படி தான் ஒடனும் அபூபக்கர் பாய். நபிவழியை குழப்பம் என்று சொல்லும் உங்களை போன்றவர்களுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்டுவானாக.//
ReplyDeleteநபி வழியை குழப்பம் என்று சொல்பவர்கள் நீங்களே ...உங்களை போன்றவர்களுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்டுவானாக....ஆமீன் .
'நிச்சயமாக ஒன்றுபட்ட ஜமாத்தை பிரித்து குழப்பத்தை உண்டு பண்ணுகின்றவர்கள் நாசமாகட்டும்'
தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரை முதலில் மாற்றுங்கள்.
இதை நான் பலமுறை சொல்லி உள்ளேன். காரணம் நாளைய வரலாற்றில் இந்தியாவில் ஓர் இறைகொள்கை என்ற தவ்ஹீத் ஜமாஅத் என்ற முஸ்லிம்களும் அதை ஏற்றுகொள்ளாத முஸ்லிம்களும் இந்தியாவில் வாழ்ந்து வந்தனர் என்று காவிகளால் இந்திய முஸ்லிம்கள் உங்கவர்களின் அந்த தவ்ஹீத் ஜமாஅத் என்ற தேவையற்ற Title லால் விமர்சனம் செய்யபடுவார்கள்.
இஸ்லாமியர்கள் அனைவரும் தொழுகையில் மட்டும் வித்தியாசம் இல்லாமல் இருக்கின்றார்கள், ஆனால் ஒருசில ஒழுங்கில் வித்தியாசம் காட்டினாலும் தோலோடு தோல்ஒட்டி நின்றாலும் மீதம் உள்ள அனைத்திலும் வித்தியாசமுள்ள மன நிலையில் இருக்கின்றார்கள்.
ReplyDeleteயாருக்காவது வாக்குவாதம் பண்ண இஷ்டம் இருந்தால், தயவுசெய்து நேருக்குநேர் மோதிக்கொள்ளுங்கள் (தைரியம் இருந்தால்), இப்படி தொலை தூரத்தில் இருந்துகொண்டு பொது வலைதளத்தில் மோதிக்கொள்வது கொள்வது அவ்வளவு நல்லதாக தெரியவில்லை, மாற்று மத சகோதர சகோதரிகளுக்கு சாம்பிராணி போட்டமாதிரி.
நாளுக்கு இந்த சாம்பிராணி புகை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது, இதற்க்கு யார் காரணம்? சமுதாய இயக்கங்களாகிய நீங்கள் சிந்திக்க வேண்டாமா? பொதுமக்களாகிய நீங்களும் சிந்திக்க வேண்டாமா?
சத்தியமாக உங்களைப்பார்த்தால் வெட்கமாக இருக்குது.
அபூபக்கர்,
ReplyDeleteபதிலே தரமாட்டேன் என்றீர்கள். இப்போது பதில் தருகிறீர்கள்? என்ன தான் கொள்கை?
//நபி வழியை குழப்பம் என்று சொல்பவர்கள் நீங்களே ...உங்களை போன்றவர்களுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்டுவானாக....ஆமீன் .//
நாங்கள் நபிவழியை குழப்பம் என்று சொன்னதற்கு ஆதாரம் தர முடியுமா? உங்களால் ஒரு போதும் முடியாது. முடிந்தால், நாங்கள் நபிவழியை குழப்பம் என்று சொன்னதற்கு ஆதாரம் தந்து உங்களை நேர்மையாளர் என்று நிருபித்து காட்டுங்கள்.
//'நிச்சயமாக ஒன்றுபட்ட ஜமாத்தை பிரித்து குழப்பத்தை உண்டு பண்ணுகின்றவர்கள் நாசமாகட்டும்' //
உங்களுக்கு குர்ஆன் ஹதீஸ் ஞானம் அறவே இல்லை என்பதற்கு இந்த உளறல் ஆதாரம். ஒன்றுபட்டு வரதட்சணை, வட்டி, இணைவைப்பு, அனாச்சாரம் என்று இருப்பவர்களுக்கு குர்ஆன் ஹதீஸ்களை எடுத்துச் சொல்லி, ஒன்றுப்பட்ட கூட்டத்தில் நல்லவர்களை பிரித்து எடுப்பது தான் நபிவழி. ஸஹர் பாங்கு நபிவழி என்பதற்கு ஹதீஸ் ஆதாரம் தந்த பின்னர் அதை வழிகேடு என்று சொல்லும் உங்களை போன்ற வழிகேடர்களுக்கு ஒற்றுமை தான் முக்கியம், மார்க்கம் அல்ல.
//தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரை முதலில் மாற்றுங்கள்.
இதை நான் பலமுறை சொல்லி உள்ளேன். //
இதே தத்துவத்தையா பல முறை சொல்லியுள்ளீர்கள், ஒரு முறையே படிக்க முடியலையே..
//காரணம் நாளைய வரலாற்றில் இந்தியாவில் ஓர் இறைகொள்கை என்ற தவ்ஹீத் ஜமாஅத் என்ற முஸ்லிம்களும் அதை ஏற்றுகொள்ளாத முஸ்லிம்களும் இந்தியாவில் வாழ்ந்து வந்தனர் என்று காவிகளால் இந்திய முஸ்லிம்கள் உங்கவர்களின் அந்த தவ்ஹீத் ஜமாஅத் என்ற தேவையற்ற Title லால் விமர்சனம் செய்யபடுவார்கள். //
இந்தியாவில் தவ்ஹீத் கொள்கையை ஏற்ற முஸ்லிம்களும், தவ்ஹீதை ஏற்காத பெயர் தாங்கிகளும் உள்ளார்கள் என்பதை ஒத்துக்கொண்டுவிட்டீர்கள். காவி விமர்சனம் செய்வான் என்பதால் கொள்கையை காற்றில் பறக்கவிடுவதா? அல்லது யார் என்ன விமர்சனம் செய்தாலும், அல்லாஹ் சொன்ன முறைப்படி வாழ்வதா என்பதை அல்லாஹ்வை அஞ்சும் மக்கள் முடிவு செய்வார்கள். தவ்ஹீத் ஜமாஅத் இருப்பதால் தான் காவிகள் கூட இஸ்லாத்தை நோக்கி வருகிறார்கள். அது சரி, சுன்னத் வல் ஜமாஅத் என்று (பொய்யாக) பெயர் வைத்துள்ள ஜமாஅத்தில் தானே நீங்கள் உள்ளீர்கள். இதை வைத்து, காவிகள் இந்தியாவில் சுன்னத்தை ஏற்ற முஸ்லிம்களும் சுன்னத்தை ஏற்காத முஸ்லிம்களும் இருந்தார்கள் என்று உங்களின் அற்புத மூளையில் உதித்த கேள்வியை அவர்கள் கேட்க மாட்டார்களா?
தொடர்ந்து எழுதுங்க சார்....
//உங்களுக்கு குர்ஆன் ஹதீஸ் ஞானம் அறவே இல்லை என்பதற்கு இந்த உளறல் ஆதாரம். ஒன்றுபட்டு வரதட்சணை, வட்டி, இணைவைப்பு, அனாச்சாரம் என்று இருப்பவர்களுக்கு குர்ஆன் ஹதீஸ்களை எடுத்துச் சொல்லி, ஒன்றுப்பட்ட கூட்டத்தில் நல்லவர்களை பிரித்து எடுப்பது தான் நபிவழி. ஸஹர் பாங்கு நபிவழி என்பதற்கு ஹதீஸ் ஆதாரம் தந்த பின்னர் அதை வழிகேடு என்று சொல்லும் உங்களை போன்ற வழிகேடர்களுக்கு ஒற்றுமை தான் முக்கியம், மார்க்கம் அல்ல.//
ReplyDeleteசமுதாயத்தின் பேரில் அமைப்புகளை ஏற்படுத்திக்கொண்டு அரசியல் என்னும் சாக்கடையில் தனக்கு ஆதாயம் இல்லை என்பதற்காக அவ்வப்போது தாவும் கொள்கையுடைய நீங்கள் உங்களுக்கு பின்னால் மூளை சாலை செய்யப்பட்ட அப்பாவி இளைங்கர்கள். 2005 களில் அனைத்து தரப்பு அமைப்புகளும் ஒற்றுமையாக இருந்துவிட்டு உங்களை நம்பி பொருளுதவி செய்த மக்களுக்கு சுனாமியில் ஊழல் என்று சமூகத்தை மற்றவைகள் ஏளனம் செய்யும் அளவிற்கு சண்டை ....இப்படி நீளும் பட்டியலை உடைய நீங்கள் எல்லாம் மார்க்கத்தில் உள்ள விசயங்களை எடுத்துசொல்ல அருகதை அற்றவர்கள் .நான் சுன்னத் வாழ் ஜமாஅத் என்று கூறவில்லை.உங்களின் கொள்கைக்கு ஆதரவு அளிக்காதவர்களை உங்களின் எதிரிகளை போல் விமர்சனம் செய்யவேண்டாம் .உங்களின் மார்க்க கொள்கை தவிர சமுதாய விழிப்பில் உங்களை நான் ஆதரிப்பவன் .சமுதாயத்தில் மடமை சீர்திருத்தக்கள் எனப்படும் வரதட்சினை
ஒழிப்பு .கப்ரு வணக்கம் போன்ற வற்றை ஒழித்தவர்கள் மார்க்கவிசயத்தில் அதிகம் வேண்டும் என்ற வீம்பு செய்தே பிடிக்காதவை .என்னுடைய முந்தின ஆதரவான கருத்துக்களை அறிய கீழே தருகின்றேன்.
//மாஷா அல்லாஹ் .......கியாமத்வரை இந்த பள்ளியில் ஐ வேலை தொழுகையை அல்லாஹ் நசீபாக்க அனைவரும் துஆ செய்யுவோம்.எப்போதுமே நான் ஊரில் இருக்கும் சில காலங்களில் அனைத்துப்பள்ளிகளிலும் சென்று தொழும் பழக்கம் உடையவன். அதேபோல் அங்கு இருக்கும் காலங்களில் இந்தபள்ளிக்கும் சென்றுள்ளேன்.
அல்லாஹ் நாம் அனைவர்களையும் அவன் பொருந்திக்கொள்ளும் கருத்து ஒற்றுமை உடைய மக்களாக ஆக்கி அருள அனைவரும் துஆ செய்யுவோம்.....ஆமீன் . //
//இனியாவது ஷிஃபா மருததுவமனைக்கு.....!?
இனியாவது வெளிநாடு வாழ் கணவர்களுக்கு ....!?
இனியாவது சமுதாய அமைப்புகளுக்கு...!?
இனியாவது தனியாக கிளம்பும் பெண்களுக்கு...!?
இனியாவது மருத்துவர்களுக்கு....!?
இனியாவது...!?
என்னாங்க இனியாவது?
இனிதான் மேட்டரே ஆரம்பம் ....
இது விசயத்தில் நமதூர் இஸ்லாமிய பெண்கள் பாதிக்க பட்டதாக புகைப்படமும் குமுதத்தில் வந்திருப்பதால் இன்னும் எனது மனதில் உள்ள நெருடல் நீங்கவில்லை .... இது விசயத்தில் TNTJ மற்றும் த மு மு க போன்ற அமைப்புகள் களமிறங்கி பாதிக்கபட்டோருக்கு நீதி வழங்க வேண்டுகிறேன் .//
1986 களில் PJ அவர்களின் அந்நஜாத் பத்திரிக்கையை சமுதாய சீர்திருத்தம் வேண்டி சவூதி தமாம் நகரில் ரூம் ரூமாக விற்று வந்தவன் நான்... இப்போது எனது கருத்துக்களுக்கு கிண்டல் செய்யும் நமது பிள்ளைகள் அப்போது பிறந்தே இருந்திருக்க மாட்டார்கள் . இப்படி ஏராளாம்.......இதற்கெல்லாம் காரணம் ஒரு முந்தய மாபெரும் அமைப்பு பல அமைப்புகளாக பிரிந்ததே.
//நாளுக்கு இந்த சாம்பிராணி புகை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது, இதற்க்கு யார் காரணம்? சமுதாய இயக்கங்களாகிய நீங்கள் சிந்திக்க வேண்டாமா? பொதுமக்களாகிய நீங்களும் சிந்திக்க வேண்டாமா?//
ReplyDeleteபுரட்சி மின்னல் அவர்களே ....
ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள் ஆனால் நம் சமுதாயத்தில் தெருவுக்கு ஒரு அமைப்புஎன்றாகிவிட்டது ஆகவே அரசியல் வாதிகள் இவர்களை 10 பேரை வைத்து ஒருநாளைக்கு 10 ஷோ ஓட்ட தயாராகிவிட்டனர் .
நடுநிலையாளர்கள் பொதுமக்கள் எப்போதும் சரியானவர்களே ......அமைப்புகளும் அதன் தலைமைகளுமே பிரச்சனைகளுக்கு வித்திடுகின்றன .
//நாங்கள் நபிவழியை குழப்பம் என்று சொன்னதற்கு ஆதாரம் தர முடியுமா? உங்களால் ஒரு போதும் முடியாது. முடிந்தால், நாங்கள் நபிவழியை குழப்பம் என்று சொன்னதற்கு ஆதாரம் தந்து உங்களை நேர்மையாளர் என்று நிருபித்து காட்டுங்கள்.
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்க சார்.........//
சகோ .அன்வர் அவர்களுக்கு ..
இஸ்லாத்தில் மத்ஹப்கள் இல்லை என்று பறைசாற்றும் தாங்கள் தங்களுக்கென்று ஊருக்கு ஊருக்கு தனியாக பள்ளிகளை கட்டிக்கொண்டு ஒரு தனி மத்ஹப்பை உண்டாகி உள்ளதன் நோக்கமென்ன ?
உங்களின் கொள்கைகளை விமர்சனம் செய்வோரை பதில் விளக்கம் கூறாமல் அராஜக முறையில் அவர்களின் இருப்பிடம் போய் தாக்கியதாக செய்திகளில் படித்தோமே இது நபிவழியா ?
ஸஹர் பாங்கு நபி வழி என்று தெளிவாக கருத்திட்ட பிறகும் அதை ஏற்றுக்கொள்ளுவதற்கு சகோதரர் பக்கருக்கு மனமில்லை
ReplyDeleteஇதுவும் ஒரு நபிமுழிதான்
யார் என்னுடைய வழியை புறக்கணிக்கிறார்களோ அவர்கள் என்னை சார்ந்தவர்கள் இல்லை
ஸஹர் பாங்கு இல்லை என்பதற்கு சகோதரிடம் எதுவும் ஆதாரம் இருந்தால் இங்கு தெளிவிக்கவும்
அன்பான வாசகர்களே !
ReplyDeleteபதிவுக்கு தொடர்பில்லாத பின்னூட்டங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் சில சங்கடங்கள் ஏற்பட்டுள்ளது. ஆதலால் இந்த பதிவுக்கு மட்டுறுத்தலின்றி வழங்கி வந்த பின்னூட்டமிடும் வசதியை நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
பதிவு தொடர்பாக பின்னூட்டமிடும் வாசகர்கள் அதிரை நியூசின் editoradirainews@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் குழுவினரின் பரிசீலனைக்கு பிறகு அனுமதிக்கப்படும்.
நன்றி !