.

Pages

Saturday, June 21, 2014

அதிரை அருகே அமைச்சர் வைத்திலிங்கம் வழங்கிய விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி !

அதிரை அருகே உள்ள தம்பிக்கோட்டை வடகாடு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட்டன.

இன்று மதியம் தம்பிக்கோட்டை வடகாடு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் வைத்திலிங்கம், தஞ்சை மாவட்ட ஆட்சியர் சுப்பையன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா பொருட்களை வழங்கினார்கள். குடும்ப அட்டைகள் உள்ள மொத்தம் 1150 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் அமுதா ரவிசந்திரன், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் N.R. ரெங்கராஜன்,  பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் சரோஜா மலை அய்யன் , பட்டுக்கோட்டை நகர தலைவர் ஜஹவர் பாபு மற்றும் அதிமுக மாவட்ட ஒன்றிய மற்றும் அதிரை நகர கிளை பொறுப்பாளர்கள் முஹம்மது தமீம், சிவக்குமார், ஹாஜா பகுருதீன், அசோக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.







5 comments:

  1. அதிரைக்கு எப்போ?

    ReplyDelete
  2. அதிரைக்கு வரும் அணா
    வராது

    ReplyDelete
  3. அதிரைக்கு வரும் அணா
    வராது

    ReplyDelete
  4. அதிரைக்கு வரும் அணா
    வராது

    ReplyDelete
  5. காத்திருப்போம் கடைசிவரை ........

    எல்லா வீட்டிலும் உள்ள மிக்சி கிரைண்டர் வீணாகிப் போனதும் நாம மட்டும் புதுசா வச்சிருப்போம்ல

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.