.

Pages

Sunday, June 22, 2014

கழிவு நீர் வாய்க்கால் திடீர் பெயர்த்தெடுப்பால் வர்த்தகர்கள் அவதி !

அதிரையின் பிராதான வர்த்தக பகுதியாக கருதப்படுகிற பழைய போஸ்ட் ஆபிஸ் சாலையில் உள்ள தேவா ஜுவல்லரி கடை முதல் சபீயா ஸ்டோர் வரை உள்ள கழிவு நீர் வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரிசெய்வதாக கூறி அதன் மேல்பகுதியை ஜேசிபி இயந்திரத்தை கொண்டு பெயர்த்து எடுக்கப்பட்டது. இருநாட்களாகியும் பெயர்த்து எடுக்கப்பட்ட கருங்கல் அப்புறப்படுத்தப்படாததால் சாலை வழியே செல்லும் வாகனங்களும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வாய்க்காலை ஒட்டிய வர்த்தக நிறுவனங்களும் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த வர்த்தகர்கள் நம்மிடம் கூறியதாவது :
'எங்களிடம் எவ்வித முன்னறிவிப்பும் செய்யாமல் திடீரென ஜேசிபி இயந்திரத்தை கொண்டு எங்கள் கடைகளை ஒட்டி காணப்படும் கழிவு நீர் வாய்க்கால் பெயர்த்து எடுக்கும் பணிகளை மேற்கொண்டனர். பணிகள் முடிந்து இரண்டு நாட்களாகியும் அகற்றிய கருங்கல் மற்றும் அசுத்த கழிவுகள் அப்புறப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ள வில்லை. இதனால் எங்களது வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது' என்றனர்.

இதுகுறித்து பணிகளை மேற்கொண்டு வரும் 11வது வார்டு கவுன்சிலர் அன்சர்கான் நம்மிடம் கூறியதாவது :
'கடந்த [ 20-06-2014 ] அன்று 11வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் கேட்டும், வடிகால் வசதி சரிசெய்ய கோரியும் பொதுமக்கள் மேற்கொண்ட சாலை மறியலின் எதிரொலியாக அதிரை காவல் நிலையத்தில் பட்டுகோட்டை வட்டாட்சியார் முன்னிலையில் நான், எங்கள் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சிபகத்துல்லாஹ், அதிமுக நகர துணை செயலாளர் முஹம்மது தமீம் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டோம். இதில் அதிரை காவல்துறை ஆய்வாளர், அதிரை பேரூராட்சி செயல் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

பேச்சுவார்த்தையின் இறுதியில் பேரூராட்சி செயல் அலுவலரால் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் அன்றைய மதியம் கழிவு நீர் வாய்க்காலில் உள்ள அடைப்புகள் தோண்டி எடுக்கப்பட்டன. தொடர்ந்து வேலைகள் நடந்து வருகின்றன. இன்னும் சில தினங்களில் அணைத்து கருங்கல் மற்றும் அதனை சுற்றி காணப்படும் அனைத்து கழிவுகளும் அப்புறப்படுத்தபடும்' என்றார்.






2 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    பல போராட்டங்களுக்குப் பிறகு இந்த வேலை நடந்து வருகின்றது, வியாபாரிகளும் பொது மக்களும் உணருகின்ற வலியை நம்மாலும் உணர முடிகிறது, கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள், அதாவது பெட் ரெஸ்ட்டில் இருப்பதுபோல் நினைத்துக் கொள்ளுங்கள், அல்லது இரண்டு மூன்று நாட்களுக்கு வெளியில் செல்ல முடியாது என்று இருங்கள்.

    அப்புறம் எல்லா நாட்களும் உங்களுக்காகத் தானே, பின்னே என்ன?

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. பேசாம கடைகளை காலி பண்ணிட்டு சிஎம்பி லேனில் புதிதாக மனை போட்டு விற்கிறார்களாம். சதுர அடி ஆயிரமாம். அங்கே போய் கட்டுங்க. நல்லா வியாபாரம் நடக்கும். கூடுதலா சம்பாரிக்கலாம்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.