சுமார் 50க்கும் மேற்பட்ட அப்பகுதியினர் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் இந்த சாலை வழியே செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
தகவலறிந்த இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டோரிடம் சமரசத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டன. இதைதொடர்ந்து போலீசாரால் வாகன போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இதனால் ஈசிஆர் சாலையில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
இதைதொடர்ந்து சமரசத்தை ஏற்றுகொள்ளாத பொதுமக்களில் சிலர் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பேச்சுவார்த்தைக்கு வரும் வரை அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் அமர்ந்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாசில்தார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்
குடிநீர் கேட்டு அதிரை பேரூராட்சிக்கு எதிராக கடந்த காலங்களில் இந்த பகுதி மக்கள் பலமுறை போராட்டம் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் போராட்டத்தின் மூலம் பெற போராட்டங்கள் அவசியமானதே குடிநீர் நமது ஜீவாதார அடிப்படை தேவையே இப்படியான சூழலில் நமக்கு வழிகள் நிறைய இருக்கின்றன. ஒரு பேனா முனையுடன் இத்துணை பேர்களுக்கும் ஒரு மக்கள் பிரதிநிதி போதும்.
ReplyDeleteஅதற்காக நமது பெண்களையும் தாய்மார்களையும் இப்படி நடுரோட்டில் அமர்த்தி அதை உலக மக்கள் தினமும் பார்க்கும் வலைதளங்களில் போட்டு காட்டுவதெல்லாம் தேவையற்றதே.... மேலும் இதுபோன்ற செயல்பாடுகள் நமது முன் மாதிரி அதிரை மக்களின் கோசா முறை பெண்கள் பாரம்பரியத்திற்கு ஏற்புடையதல்ல.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
அதிரையில் குடிநீர் பிரச்சனை தீர வேண்டுமானால், மனைகள் போடுவதை நிறுத்த வேண்டும், இருக்கின்ற பசுமைகளை வெட்டி சாய்த்துவிட்டு மழையை விரட்டி அடித்துவிட்டு, இப்போ தண்ணீர் தண்ணீர் என்று அழுதால் எங்கிருந்து தண்ணீர் வரும்?
பசுமையை பாதுகாக்க மனம் வரவில்லை, பசுமையை உருவாக்க நேரம் இல்லை, பசுமை இல்லாத காரணத்தினால் மழை இல்லை, நிலத்தடி நீர் இல்லை, தண்ணீரின் சிக்கனம் இல்லை. வீடு கட்டுவதில் சிக்கனம் இல்லை, துணி துவைப்பதில் சிக்கனம் இல்லை, கை கழுவதில் சிக்கனம் இல்லை.
பசுமையை அழித்து மனைபோட அனுமதி கொடுத்த ஆட்சியாளர்கள் சரி இல்லை, கூட்டு குடித்தனம் வாழ மறுக்கும் பிள்ளைகள் சரி இல்லை, வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்தால் இழந்த பசுமையை ஓரளவுக்கு சரி செய்யலாம் அதுவும் இல்லை. மிஞ்சினது பொருக்கு மண்ணுதான்.
இன்னும் கொஞ்சம் பொறுத்து பாருங்கள், மக்கள் தண்ணீர் தண்ணீர் என்று அலையவேண்டி வரும்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
பதிவுக்கு நன்றி தகவலுக்கும் நன்றி மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் போராட்டத்தின் மூலம் பெற போராட்டங்கள் அவசியமானதே குடிநீர் நமது ஜீவாதார அடிப்படை தேவையே இப்படியான சூழலில் நமக்கு வழிகள் நிறைய இருக்கின்றன. ஒரு பேனா முனையுடன் இத்துணை பேர்களுக்கும் ஒரு மக்கள் பிரதிநிதி போதும்.அதற்காக நமது பெண்களையும் தாய்மார்களையும் இப்படி நடுரோட்டில் அமர்த்தி அதை உலக மக்கள் தினமும் பார்க்கும் வலைதளங்களில் போட்டு காட்டுவதெல்லாம் தேவையற்றதே.... மேலும் இதுபோன்ற செயல்பாடுகள் நமது முன் மாதிரி அதிரை மக்களின் கோசா முறை பெண்கள் பாரம்பரியத்திற்கு
ReplyDeleteஏற்புடையதல்ல
இப்படிக்கு
ஜம் ஜம் அஸ்ரப்
ெசக் ெமடு
அதிைர
phone 0091 9976438566
அடிப்படை தேவைகளில் ஒன்று தண்ணீர் அதை சரிவர அளிக்காத பேரூராட்சியை கண்டிக்கிறேன்...
ReplyDeleteஅன்புடன்
மான்.A.ஷேக்
Human Rights.
Thanjavur District. Adirampattinam-614701.
\\அதற்காக நமது பெண்களையும் தாய்மார்களையும் இப்படி நடுரோட்டில் அமர்த்தி அதை உலக மக்கள் தினமும் பார்க்கும் வலைதளங்களில் போட்டு காட்டுவதெல்லாம் தேவையற்றதே.... மேலும் இதுபோன்ற செயல்பாடுகள் நமது முன் மாதிரி அதிரை மக்களின் கோசா முறை பெண்கள் பாரம்பரியத்திற்கு ஏற்புடையதல்ல.\\
ReplyDeleteஆம். ஏற்கின்றேன்.நம் பெண்மணிகள் வைரமணிகள்; கண்மணிகள் அவர்களைப் பாதுகாப்பது நம் கடமை; அவர்கள் நம் உடைமை; மாறாக இப்படி ஆர்ப்பாட்டங்களுக்குக் கேடயமாகப் பயன்படுத்துவது மடமை! பெண்கள் இல்லாமலும் ஊரில் உள்ள ஆண்கள் திரண்டாலே கூடும் கூட்டம்; இதனால் நிறைவேறாதா நம் நாட்டம்?