வரவை எதிர்நோக்கி
பணிதல் நலமன்றோ
பாருலகார் மகிழ்வும் அதுவன்றோ
கடமை ஐந்தினையும்
கண்ணியப்படுத்திடவே
நோன்பு இருத்தல் நலமே
நோய் நொடி தீர்த்து சுகம் தருமே
இறையோன் விரும்பும் நோன்பை
இதமாய் நோற்று நாமும்
இதயம் நிறைத்திடுவோம்
இனிதாய்
இன்புற்று நோன்பிருப்போம்
பாவத்தைப் போக்கி நாமும்
லாபத்தை ஈட்டிடுவோம்
படைத்தவன் மகிழ்ந்திடவே
பட்டினி இருந்திடுவோம்
தூய இறையோனை
துளியும் மறவாது
தொழுது வணங்கிடுவோம்
தூக்கம் குறைத்துக் கொண்டு
திறந்த மனத்தைக் கொண்டு
துவா பல கேட்டிடுவோம்
மரணம் வருமுன்னே
மாய சைத்தானை விலகி
மறுமைக்குத் தேடிக்கொள்வோம்
இயலாமனிதரிடம்
இரக்கம் காட்டிடுவோம்
இறைவன் விருப்பப்படி
இகத்தில் வாழ்ந்திடுவோம்
நாதியற்ற ஏழைஎளியோர்
நம்மில் பலருண்டு
நாமும் மனமுவந்து
ஜகாத் சதக்காவை
வாரி வழங்கிடுவோம்
நாவைப் பேணிக்காத்து
நபுசைக் கட்டுக்குள் வைத்து
நலமாய் நோன்பு நோற்ப்போம்
எந்நாளும்
நாயன் அருள் பெறுவோம்
- அதிரை மெய்சா
Thanks for ramadan kareem welcome poet,its very real and very nice.
ReplyDeleteநோன்பின் மாண்பு அருமை !
ReplyDeleteஅனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
ரமழான் முபாரக்.
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்..
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
ரமழான் முபாரக், யா அல்லாஹ் இந்த புனிதமிகு மாதத்தில் எங்கள் ஈமானை பலபடுதுவாயாக ஆமீன்........
ReplyDeleteஅன்புடன.
மான்.A.ஷேக்
Human Rights.
Thanjavur District. Adirampattinam-614701.