மருத்துவ சிகிச்சைக்காக நமதூர் ஏழை எளியோர் பயனுறும் வகையில் இந்த புனிதமிக்க ரமலான் மாதத்தில் உலகெங்கிலும் வாழும் நம் சகோதரர்கள் வழங்க இருக்கும் ஜக்காத் மற்றும் சதாக்க நிதி உதவியை அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு வழங்கிட வேண்டியும், ஏழை எளியோருக்காக ஷிஃபா மருத்துவமனை ஆற்றிவரும் மருத்துவ சிகிச்சை குறித்தும், விரைவில் துவங்க இருக்கிற 24 மணி நேர அவசர சிகிச்சை சேவை குறித்தும், மருத்துவத்திற்காக உள்ளூர் மக்கள் தொலை தூரங்களுக்கு சென்று இழக்கும் பொருளாதாரம் - நேரம் குறித்தும், மருத்துவ காப்பிட்டு திட்டம் துவங்குவது குறித்து நம்முடைய கருத்துகள் ஆகியன குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் ஷிஃபா மருத்துவமனையின் நிர்வாகச் செயலர் S.M.ஷிப்ஹத்துல்லாஹ் அவர்கள்.
ஜக்காத் நிதியை கீழ் கண்ட ஷிஃபா மருத்துவமனைக்கு சொந்தமான வங்கி கணக்கிலும்,
For Zakat :
SHIFA HOSPITAL
INDIAN BANK
ADIRAMPATTINAM BRANCH
CURRENT A/C No : 742262101
சதக்கா நிதியை கீழ் கண்ட ஷிஃபா மருத்துவமனைக்கு சொந்தமான வங்கி கணக்கிலும்,
For Sathakka :
ADIRAMPATTINAM RURAL DEVELOPMENT ASSOCIATION SHIFA HOSPITAL
CANARA BANK
ADIRAMPATTINAM BRANCH
S/B A/C No :120120322
செலுத்த அன்புடன் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
தொடர்புக்கு :
0091 8870917199
0091 4373 242324
E-mail : shifahospital88@yahoo.co.in
ஷிஃபா மருத்துவமனையின் எழில்மிகு தோற்றம்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
ரமழான் முபாரக்.
ஷிஃபா மருத்துவமனையின் வளர்ச்சியை விரும்பும் அதிரையர்களில் நானும் ஒருவன், அயராத முயற்சி நல்ல பலனைத்தரும், கூட்டு முயற்சி அதைவிட நல்ல நல்ல பலன்களைத்தரும். இது என்னுடைய மறுக்க முடியாத கருத்து.
மக்களின் மருத்துவ சேவைகளை கருதியும் மருத்துவமனையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும் நீங்கள் தீட்டிய திட்டங்கள் அனைத்தும் வரவேற்கத்தக்கது. அதே சமயத்தில் காப்பீட்டுத் திட்டம் சற்று குழப்பத்தை தருகின்றது, காரணம் காப்பீடு என்று வரும்போது அதோடு வட்டியும் உள்ளே நுழைய வாய்ப்பு இருக்கிறது.
மருத்துவத்திற்காக ஒரு நாளைக்கு நமதூரிலிரிந்து குறைந்தது ஐந்து லட்சம் ரூபாய்கள் வெளியூர்களில் உள்ள மருத்துவமனைக்கும் மருந்து கடைகளுக்கும் சென்று கொண்டிருக்கின்றது. மேலும் இப்படி தூரங்களுக்கு செல்வதினால் பல நோயாளிகள் அவர்களோடு செல்பவர்கள், பார்க்க செல்பவர்கள் அனைவரும் கடுமையான மன உளைச்சலுக்கும், அவதிக்கும் உள்ளாகுகின்றனர்.
இப்படியொரு அழகான இயற்க்கை சூழலில் இந்த ஷிஃபா மருத்துவமனை அமைந்ததுபோல் வேறு எங்கும் இருக்கின்றதா என்று பார்த்தால் இல்லை எனலாம். இது எல்லோருக்கும் தெரிந்து இருந்தும் வெளியூர்களுக்கு செல்வது ஏன்.
இந்த மருத்துவமனையை இன்னும் செம்மைப்படுத்தி தகுந்த திறமையான மருத்துவர்களை நியமித்து, நியாயமான மருத்துவ ஊழியர்களை பணியில் அமர்த்தி, தடையில்லா மருந்து வகைகளை உள்ளடக்கி இருபத்திநான்கு மணிநேரமும் செயல்பட வேண்டும்.
மருத்துவமையை சுற்றி தூய்மை படுத்த வேண்டும். மருத்துவமனைக்கு அருகில் தேநீர் சிற்றுண்டிகள், பரிசுப் பொருள்கள், நோயாளிகளுக்கு மனதை குளிரச் செய்யும் பொருள்கள் விற்கும் கடைகள் இந்திட வேண்டும். வரும் ஆட்களுக்கும் வாகனகளுக்கும் செக்யூரிட்டி பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும், தேவை இல்லாத ஆட்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது.
மின் வசதிகள் இருபத்திநான்கு மணிநேரமும் தடையில்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மருத்துவமனைக்கு தனிப்பட்ட முறையில் மின்மாற்றி (TRANSFORMER) ஒன்றை அமைத்துத்தர மின் வாரியத்துக்கு கோரிக்கை விடுத்து அதை செயலில் கொண்டு வர வேண்டும். ஆக எல்லா வசதிகளும் அமைந்ததாக இருக்க வேண்டும்.
குறிப்பு:- மருத்துவமனைக்கு வரும் மின் கம்பிகள் மரம் செடி கொடிகளில் படாமல் இருக்க வேண்டும், “மருத்துவமனையின் பின்புறம் மின் கம்பிகள் செடி கொடிகளில் சிக்கிக்கொண்டு பின்னிக் கிடக்கின்றது”
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
75 02 87 07 67
ஷிஃபா மருத்துவமனை வளர்ச்சி பெற வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்தில்லை அதேபோல் அதன் வளர்ச்சிக்காக நன்கொடைகள் திரட்டுவதிலும் ஆட்சேபணை இல்லை ஆனால் மார்க்க அனுமதிக்காத ஜக்காத் தொகையை கேட்பது கூடாது, ஜக்காத்தை பெற கீழ்க்காணும் பட்டியலில் உள்ளோருக்கு மட்டுமே மார்க்கம் ஜக்காத்தை பெற அனுமதித்துள்ளதால் ஷிஃபா நிர்வாகம் ஜக்காத் குறித்த தனது வேண்டுகோளை வாபஸ் பெற வேண்டும்.
ReplyDelete9:60 إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ ۖ فَرِيضَةً مِّنَ اللَّهِ ۗ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
9:60. (ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.
ஷிஃபா வளர்ச்சியில் எனக்கும் ஆர்வம் உண்டு, வளர்ந்தாலும் மக்களுக்கு பலன் தரும் வகையில் வளர வேண்டும், இதனுடைய வளர்ச்சி அதிரையை சுற்றியுள்ள இடங்களை கவரக்கூடியதாக இருக்கவேண்டும்.
ReplyDeleteஅதிரையில் நடத்திவரும் அறக்கட்டளையின் கல்விக்கூடத்திற்கும். சிபா மருத்துவமனை. தக்வா பள்ளி நிர்வாகத்தில் இருக்கும் சொத்துக்கள் இன்னும் பைபத்துல்மால் அனைத்தும் அல்லாஹ் அஞசி நடத்தப்படவில்லை என்பதற்கு பல் சான்றுகள் கூறலாம்,அல்லாஹ் என்ற வார்த்தை நம்மை நல்லவனாக காட்டுவதற்காகவே இங்கே கூறுகிறார்கள்
ReplyDeleteஅல்லாஹ் என்ற வார்த்தையி்ன் அர்த்தங்கள் ஆழங்களும் ஒவ்வொருவரையும் நடுங்கவைக்கும் அதே தருணத்தில் அவன் கருணையாளன் மன்னிப்பாளன், இனியாவது நல்லதை செய்யுங்கள் அல்லது செய்ய விட்டுக்கொடுங்கள்,
நாம் அனைவரும் பதில் சொல்லியே ஆகவேண்டும் ஒருநாள் அவனிடத்தில்
இன்று காலை சுமார் 8.15 மணி அளவில் மேலதெரு நெல் மஜீத் காக்கா அவர்கள் சைக்கிளில் போகும் போது அவர்கள் வீட்டு அருகிலேயே ஆட்டோவில் விபத்துக்குள்ளாகி பலத்த காயத்துடன் டாக்டர் ஹாஜா மைதீன் ஹாஸ்பிடலில் ரத்த காயத்துடன் சுமார் 45 நிமிடம் காத்திருந்ததை கண்டு நான் மன வேதனை அடைந்தேன். விரைவில் ஷிஃபா மருத்துவமனை இருபத்திநான்கு மணிநேரமும் செயல்பட வேண்டும் அதற்கு நிர்வாகமும் அதிரை சகோதர்களும் முயற்சித்தால் இன்ஷா அல்லாஹ் வெற்றி பெறுவோம்.
ReplyDeleteஅன்புடன.
மான்.A.ஷேக்
Human Rights.
Thanjavur District. Adirampattinam-614701.
நோய்களின் வேறுபாடுகள் கருதி அதற்கு தகுந்த மருத்துவர்களை நாடியே பெரும்பாலும் அதிரையர்கள் வெளியூர் செல்கின்றனர் தற்போது பெண்களுக்கென்று அங்கே சிபாவில் ஒரு லேடி டாக்டர் இருப்பது பாராட்டுக்குரியதே இதையே இரண்டு லேடி டாக்டர்களை நியமித்து முழுநேர சேவையை ஏற்படுத்தலாம் காரணம் பெண் மருத்துவர்களை நாடியே பெண்கள் அதிகம் வெளியூர் செல்கின்றனர் .
ReplyDeleteECR சாலைகளில் ஏற்படும் விபத்துக்களுக்கு நமதூர் GH ல் 24 மணிநேர பிரிவு அவசியம் அதேபோல் நமது அதிரை வாசிகளுக்கு என்று தேவைப்படும் அவசர சிகிச்சைகள் நிச்சயம் சிபா விற்கு வரவேண்டும் இதற்கு அதிரை மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் .
நோயாளிகளின் வருகை குறைவால் நிர்வாகத்திற்கு பொருளுதவி தேவைபடுவதால் தர்ம சிந்தனை உடையோர் உதவலாம் காரணம் இந்த அவசர சிகிச்சை மிக முக்கியம் .
அல்லது நிர்வாகம் பொருளதவி இல்லாத பட்சத்தில் இந்த மருத்துவ மனையை அப்போலோ போன்ற Net working மருத்துவ அமைப்புகளுக்கு சில ஆண்டுகள் Lease Agreement செய்யலாம் .
'நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் '
24 மணி நேர சேவை பாராட்டுக்குரியது
ReplyDeleteசிறந்த கருத்தை அண்ணன் K.M.A. ஜமால் கூறியுள்ளார். இவரை போன்ற ஆர்வலர்களை ஷிபா மருத்துவமனை நிர்வாகம் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.