இன்றைய முதல் ஆட்டமாக மதுரை அணியினரும், திருப்பூர் அணியினரும் ஆடினார்கள். அதனைத்தொடர்ந்து அதிரை KMC அணியினரும் திருச்சி அணியினரும் விளையாடினார்கள்.
முன்னதாக இன்றைய முதல்நாள் ஆட்டங்களை சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட காவல்துறை ஆய்வாலர் திரு.ரவிசந்திரன், நகர காங்கிரஸ் தலைவர் MMS அப்துல் கரீம், தாஜுல் இஸ்லாம் சங்கத் தலைவர் M.M.S சேக் நசுருதீன், பொருளாளர் பகுருதீன், சமூக ஆர்வலர்கள் மான் சேக், ரபி அஹமது மற்றும் WSC நிர்வாகிகள் ஆகியோர் விளையாட்டு வீரர்களுக்கு கைகுலுக்கி துவக்கி வைத்தனர்.
ஜொலிக்கும் மின்னொளியில் இரவு நேர ஆட்டங்களாக இன்றும் நாளையும் நடைபெற இருக்கின்ற போட்டிகளில் மாநில அளவில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த தலைசிறந்த அணிகள் ஆட இருக்கின்றனர். இதில் கலந்துகொண்டு வெற்றிபெறும் சிறந்த அணிகளுக்கு நாளை நடக்கும் இறுதிபோட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களால் பல்வேறு பரிசளிப்புகள் வழங்கபட இருப்பதாக போட்டியை நடத்துபவர்கள் தெரிவித்தார்கள்.
TIYA மற்றும் WSC ஆகியோர் இணைந்து வழங்க இருக்கின்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட் புக்குகள், 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற நமதூர் சாதனையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிப்பு மற்றும் நலிவடைந்த 5 ஏழை குடும்பங்களுக்கு நிதி உதவி ஆகியன வழங்க இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் கூறினார்கள்.
சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு நடுவர்களாக செயல்படும் வரதராஜன் மற்றும் அருள் ஜோதி ஆகியோர் இன்றும் நாளையும் நடைபெற உள்ள போட்டிகளுக்கு நடுவர்களாக பணிபுரிவது குறிப்பிடத்தக்கது. நிகழ்சிகளை ராஜேந்திரன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இன்றைய முதல் நாள் ஆட்டங்களை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகைதந்து ரசித்தனர்.வந்திருந்த அனைவருக்கும் அமர்ந்து பார்வையிட நாற்காலி வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
களத்திலிருந்து அப்துல் வஹாப் ( உஜாலா )
அல்ஹம்துலில்லாஹ் யுா
ReplyDeleteசகோதரர்களுக்கு .....நமதூரில் அடிப்படை வசதிகளும் மற்றும் ஜீவாதார உரிமை குடிநீரும் இல்லாத இந்த காலகட்டத்தில் நமது பெண்களும் தாய்மார்களும் ரோட்டில் உட்கார்ந்து போராடும் அவலநிலைக்கு நாம் தள்ளபட்டுளோம் .இப்படியான சூழலில் கால்பந்து ,கைபந்து ,கிரிகெட் ,மின் ஒளி பந்து தெருவுக்கு தெருவு விளையாட்டு திருவிழாக்கள் இதெல்லாம் தேவையற்றது இவைகள் மனிதர்களின் தன்னிறைவு பெற்ற மக்களின் பொழுதுபோக்கு.
ReplyDelete