.

Pages

Wednesday, June 11, 2014

பேரூராட்சி துப்புரவு பணியாளர்களின் தொடர் வேலை நிறுத்தத்தால் குப்பைகள் குமியும் அபாயம் !

அதிரை பேரூராட்சியின் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஊழியர்களாக மொத்தம் 33 பேர்கள் பணியாற்றி வருகின்றார்கள். தினமும் இவர்கள் அதிரையில் உள்ள 1 முதல் 21 வார்டுகளில் குமியும் குப்பை கூளங்களையும், கழிவுகளை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

இவர்கள் கடந்த ஞாயிறு முதல் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் அதிரையில் ஆங்காங்கே குப்பைகளும் கழிவுகளும் குமியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து துப்புரவு பணியாளர்கள் தரப்பில் கூறியதாவது...
'அதிரை பேரூராட்சியின் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஊழியர்களாக மொத்தம் 33 பேர்கள் பணியாற்றி வருகிறோம். எங்கள் பணிகளுக்கு பொறுப்பு வகிக்கும் மேஸ்திரி தகாத வார்த்தைகளால் எங்களை திட்டியதால் எங்களை வருத்தமடைய செய்துள்ளது. திட்டியது தவறு என எங்களிடம் வருத்தம் தெரிவிக்காதவரை நாங்கள் பணி நிறுத்தத்தை தொடர போவதாக.நம்மிடம் தெரிவித்தனர். மேலும் இது குறித்து நாங்கள் மாவட்ட ஆட்சியர், பேரூராட்சி இணை இயக்குனர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆகியோருக்கு புகார் அளிக்க இருப்பதாகவும் கூறினார்கள்.

3 comments:

  1. //எங்கள் பணிகளுக்கு பொறுப்பு வகிக்கும் மேஸ்திரி தகாத வார்த்தைகளால் எங்களை திட்டியதால் எங்களை வருத்தமடைய செய்துள்ளது. திட்டியது தவறு என எங்களிடம் வருத்தம் தெரிவிக்காதவரை நாங்கள் பணி நிறுத்தத்தை தொடர போவதாக.நம்மிடம் தெரிவித்தனர். //

    இது கண்டிக்க படவேண்டிய விஷயம் இதுபோன்ற ஆதிக்க வர்க்கங்களின் Egoism சரிசெய்யப்படவேண்டும். சமத்துவத்தை வலியுறுத்தும் இஸ்லாத்தில் கூறப்பட்டவைகள் .

    'நிச்சயமாக உங்களில் ஏழ்மையும் பலகீனமும் கொண்டோரை நீங்கள் தரம்தாழ்த்தி விடாதீர்கள்
    அவர்களின் துஆக்கள் ஏற்று கொள்ளபடுகின்றன'

    ReplyDelete
  2. அதிகாரிகள் தலையிட்டு பொது பிரச்சனை தீர்க்க வேண்டும், எதிலும் கண்டிப்பு தேவை தான் ஆனால் மனதை புண்படியும் வார்த்தைகள் அல்ல.

    மேஸ்திரி கொஞ்சம் கீழ இரங்கி வாங்க ,,,, இல்லன்ன கவனிட்சிடுவாங்க.

    ReplyDelete
  3. இங்கே நிக்காதீங்க, வூட்டுக்கு போயிருங்க.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.