.

Pages

Wednesday, June 11, 2014

அவசரம் ! டாக்டர் ப்ளீஸ் !!

சுகங்கள் பலவகைகளாக இருந்தாலும் நோயற்ற ஆரோக்கியமான உடம்பே மனிதனுக்கு மிக மிக முக்கியமானது.

சுகம் என்றால் ஒன்றா அல்லது இரண்டா என்று மனிதனிடத்தில் கேட்டால் அவன் தன் இஷ்டத்துக்கு அடுக்கிக் கொண்டே போவான். எது வரைக்கும் போவான் என்று நினைத்தோமேயானால் அதன் எல்லை எதுவரைக்கும் என்று அவனுக்கே தெரியாது அந்த அளவுக்கு போய்க் கொண்டே இருப்பான்.

ஆக, மனிதன் சுகத்தை எப்படியாவது அடையணும் என்று நினைத்தாலும் உடல் ஆரோக்கியம் இல்லையென்றால் எந்த சுகத்தையும் அவனால் அனுபவிக்க முடியாது. அன்றும் சரி இன்றும் சரி உடல் ஆரோக்கியம் மிக மிக முக்கியமானதாக இருக்கின்றது.


இன்று ஆரோக்கியத்தை நாடி மனிதன் பலவழிகளில் உடம்புகளை பரிசோதனை செய்து பார்க்கின்றான். பத்தியம் காக்கின்றான், காலையில் வேகமாக நடக்குறான், ஓடுகிறான், குதிக்கிறான், க்ரீன் டீ குடிக்கிறான், மூச்சை உள்ளுக்குள் இழுத்து தம்கட்டி மெதுவாக வெளியிடுகின்றான்..

இன்னும் சிலர் டாக்டரிடம் உடம்பை காட்டுவதிலும் மாத்திரை மருந்துகளிலும் அதிக கவனம் செலுத்தி அதுக்கு அதிக பணத்தையும் செலுத்தி வருகின்றனர், ஆனாலும் அதில் சிலர் பத்தியத்தை சுத்தமாக கடைபிடிக்க மாட்டார்கள். விளைவு வியாதி கூடிக்கொண்டே போகுமே தவிர குறையாது. வியாதிகளுக்கு தோதா மருத்துவர்களும் வண்ண வண்ண நிறங்களில் மருந்துகளும் நாளுக்கு நாள் முளைத்துக் கொண்டே வருகின்றது.

நமதூரை எடுத்துக்கொண்டால் அரசு மருத்துவ மனையிலும் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், மருந்து கடைகளிலும் வியாதியஸ்தர்கள் கூட்டம் அலைமோதுவதை பார்க்கலாம். ஆனால் இரவு நேரங்களில் அவரசர தேவைகளுக்காக எந்த மருத்துவரும் புறப்பட்டு வர தயாராக இல்லை என்று பொது மக்கள மத்தியில் நிலவி வரும் ஒரு மிகப் பெரிய குற்றச்சாற்று.

முப்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் நமதூரில் எந்த நேரமாக இருந்தாலும் சரி, அது நடு இரவு ஒரு மணியானாலும் சரி, மருத்துவர்கள் தயங்காமல் வந்து வைத்தியம் பார்ப்பார்கள், எல்லா மருந்துகளையும் ஒரு பேக்கில் வைத்து கொண்டு வருவார்கள். அதுவும் ஒரு பேட்டரி லைட்டின் வெளிச்சத்தில் காலில் கருவமுள் குத்த, கரடுமுரடு ரோடு, இப்படி பல தடைகளை கடந்து வந்து முகம் சுளிக்காமல் வைத்தியம் பார்த்தார்கள். சில நேரங்களில் நடந்து வருவார்கள், குதிரை வண்டியிலும் வருவார்கள். அதற்கேற்ப அன்று குதிரை வண்டி காரர்கள் வீட்டில் தூங்காமல் அவசர தேவைக்காகவே குதிரை வண்டியிலேயே தூங்குவார்கள்.

அன்று மின்சார வசதிகள் கிடையாது, சாலை வசதிகள் கிடையாது, தொலைபேசி வசதிகள் கிடையாது, வாகன வசதிகள் கிடையாது, மருந்து கடைகளும் அவ்வளவாக கிடையாது, போதுமான பொருளாதார வசதிகளும் கிடையாது.



இன்று எப்படி இருக்குது?
இன்று எல்லா வசதிகளும் இருக்குது. இரவு நேரங்களில் அவசரத்திற்கு வருவதற்கு எந்த மருத்துவரும் தயாராக இல்லை. இது மிகப்பெரும் குற்றச்சாட்டாக அதிரையில் நிலவி வருகிறது. 

பொதுவாக சில/பல மருத்துவர்களின் அலட்சியப்போக்கு எல்லா மருத்துவர்களையும் பாதிக்கின்றது. ஆனாலும் இதனால் பல உயிர்களை இழக்கும்போது பொதுமக்கள் யார்தான் கோபப் படாமல் இருப்பார்கள். மருத்துவர்களின் அலட்ச்சியப்போக்கினால் பல உயிர்கள் பழியாவதை பல ஊடக வாயிலாக பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். அண்மையில் கூட நமதூர் சகோதரர் சம்சுதீன் அவர்களுடைய தாயாரின் மரணம் இப்படித்தான் நடந்தது என்று நாம் எல்லோரும் அறிந்ததே.

அதிரையில் உள்ள அனைத்து மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள், மருந்துகடை உரிமையாளர்கள், தன்னார்வ தொண்டர்கள், நகர சேர்மேன், பொது மக்கள், ஆம்புலன்ஸ் இயக்குனர்கள், ஆட்டோ உரிமையாளர்கள் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு அவசர மருத்துவக் குழு அமைக்க வேண்டும்.

இந்த குழு ஒவ்வொரு வாரமும் கூட வேண்டும். அகால நேரங்களில் வியாதியஸ்தர்களை மருத்துவ சிக்கலில் இருந்து எப்படி காப்பாற்றுவது போன்ற தீர்மானங்களை உருவாக்க வேண்டும்.

பகல் நேரங்களில் மற்றும் இரவு நேரங்களில் ஏற்படும் அவசரகால மருத்துவ சம்பந்தப்பட்ட சேவைகளை எப்படி நடத்துவது என்று ஆலோசிக்க வேண்டும். ஆலோசனைப்படி சுழற்ச்சி முறையில் பகல் நேர அவரச தேவைகளுக்கு ஒரு மருத்துவர் என்றும், இரவு நேர அவசர தேவைகளுக்கு ஒரு மருத்துவர் என்றும் ஒவ்வொரு நாளும் மாறி மாறி சுழற்ச்சி முறையில் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி ஒரு வழியை வகுத்து முறைப்படுத்தினால் சரியாக வரும் என்று என்னுடை நம்பிக்கை.

டாக்டர் அவர்களே, மக்கள் உங்களை டாக்டர்(DOCTOR) என்று கூப்பிடுகிறார்களே, எதுக்காக மக்கள் அப்படி கூப்பிடனும்? நீங்கள் ஒரு டாக்டர். இதுக்குமேல் சொல்வதற்கு வேறு ஒன்றும் இல்லை டாக்டர்.
ப்ளீஸ்!  

இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED.
Consumer & Human Rights.
Thanjavur District Organizer, Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com

20 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    ReplyDelete
  2. ஜமால் காக்கா அவர்களின்
    காலத்திற்கு ஏற்ற அருமையான பதிவு. பழமைவாதம் என்று நாம் எதையெல்லாம் தவறாக எண்ணி கிண்டலும் கேலியும் செய்தோமோ அவை அத்தனைத்தும் நலவேயன்றி வேறோண்டுமில்லை .

    திருமறை கூறுகின்றது ...
    'நிச்சயமாக உங்களில் முன்னோர்களை உங்களைவிட அறிவாற்றல் உள்ளவர்களாகவும் வலிமை உடையவர்களாகவும் படைத்துள்ளோம் '

    ReplyDelete
    Replies
    1. இது விஷயத்தில் உங்களின் விரிவான கருத்து என்ன.

      Delete
  3. Good Idea it will process soon better.

    ReplyDelete
  4. நம்ம மக்கள் குடும்ப டாக்டர் , கைராசி டாக்டர் என்று குறுப்பிடும் டாக்டர் அவசர தேவைக்கு வரணும் என்று எதிர்பார்க்கும் நிலையில் உள்ளவர்கள் - இதை மாற்றிக்கொள்ள வேண்டும்.

    பொது மக்களிடம் கையெழுத்து வாங்கி ஊரில் இருக்கும் எல்லா டாக்டர் இடம் சமர்பித்தால் அவர்கள் மக்கள் உணர்வை புரிந்து ஒரு முடிவுக்கு வரலாம்- செய்வீர்களா.......

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது சரிதான், அவசரம் என்று வரும்போது என்ன செய்வது?

      Delete
  5. பதிவுக்கு நன்றி.தகவலுக்கும் நன்றி.

    ReplyDelete
  6. Night sift dotors must in adirai

    ReplyDelete
  7. நம்ம வூர்லே ராத்திரி நேரத்தில் வர்ற மாதிரி டாக்டர் யாருமே இல்லையே, எல்லாருமே பகல் டாக்டருதான், அவர்கள் ராத்திரிலே டாக்டர் இல்லையாம், அதுனாலே, புதுசா யாரையாவது அப்பாய்ன்ட் மென்ட் செய்யணும்.

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    ஜமால் காக்கா காலத்திற்க்கு அருமையான விழிப்புணர்வு கட்டுரை என்று தான் சொல்ல வேண்டும் ஒரு காலம் இருந்தது மருத்துவ தொழிலை ஒரு சேவையாக கருதி செய்து வந்தார்கள், நமதூரை பொருத்தவரை டாக்டர் இபுராஹிம், டாக்டர் ஹனிப் போன்றவர்களை அதிரை மக்கள் யாரும் மறக்க முடியாது மறுக்கவும் முடியாது அவர்களின் மருத்துவமனையில் எழுதி வைத்திருபார்கள் 24 மணி நேரமும் சேவை என்று அவர்கள் இது ஒரு சேவையாகவே கருதி செய்து வந்தனர் இரவு நேரங்களில் எப்போ போய் கூப்பிட்டாலும் மறுக்காமல் வருவார்கள் எத்தனை முறை கூப்பிட்டாலும் வாருவார்கள், குதிரை வண்டி ஒட்டுனர்களும் இரவு நேர சேவைக்கா வண்டியிலேயே தூங்குவார்கள்.

    ஆனால் இப்போது உள்ள டாக்டர்கள் எல்லாம் மருத்துவத்தை ஒரு பணம் போட்டு பணம் எடுக்கும் ஒரு தொழிலாக மட்டுமே கருதுகின்றனர், அவர்களுக்கு தேவையான பணத்தை பகலிலேயே சம்பாரித்து விடுவதால் அவர்கள் இரவு நேரங்களில் யார் அலைத்தாலும் வருவது கிடையாது. ஏன் அவர்களின் வீடுகளுக்கு சென்று கதவை தட்டியாலும் திறக்கப்படுவது கிடையாது.

    இவர்களின் அலச்சிய செயலால் நமதூரில் எத்தனை உயிர்கள் போய்விட்டது, எத்தனை சமுதாய அமைப்பும் அரசியல் கட்சிகளும் இருந்து இது விசையத்தில் எல்லோரும் கண்டும் கானமல் இருப்பதை பார்க்கும் போது தான் மனதுக்கு வேதனையாக உள்ளது. எதற்கெல்லாமோ போராட்டம் செய்யும் சமுதாய அமைப்புகளும் சரி அரசியல் கட்சிகளும் சரி இந்த விசையத்தில் ஏன் ஒருமித்த கருத்தில் ஒரு முடிவு எடுக்க யாரும் முன் வரவில்லை. நம்முடைய அலச்சிய போக்கால் இன்னும் நாம் எத்தனை உயிர்களை பரி கொடுக்கபோகிறோம் என்று தெரியவில்லை இரவு நேர மருத்துவ சேவைக்கு வேண்டி சாதி மதம் கட்சி பாகுபாடு பார்க்காமல் அனைவரும் ஒன்று சேர்ந்து நமதூர் மெயின் ரோட்டில் ஒரு அமைதியான ஒரு போராடத்தை செய்யவேண்டும்.நாம் இப்படி எதாவது ஒரு போராடம் செய்தால் தான் அரசங்க காதுகளில் சென்று அடையும் என்பது தான் என் ஆதங்கம்.

    என்றும் அன்புடன்
    அதிரை அல்மாஸ்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது சரிதான், இவர்களோடு அன்று இக்ராம் டாக்டரும் இருந்தாரே, மறந்து விட்டீர்களா?

      Delete
  9. மருத்துவ சேவை பழம்காலத்தில் எப்படி இருந்தது என்று இன்று உள்ள மருத்துவர்களுக்கு நன்கு உணர்த்தியிருந்தீர்கள்.

    இதை படிப்பதுடன் விட்டுவிடாமல் இரவு நேரங்களில் நோய்வாய்ப் படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஊர்முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடி மருத்துவர்களை அணுகி இதற்க்கு தீர்வுகாணலாம்.

    ReplyDelete
    Replies
    1. இந்த பிரச்னைக்கு ஒரு முடுவு கட்ட வேண்டும், இன்ஷா அல்லாஹ் முடிவுகட்டுவோம்.

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.