பேராவூரணி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா,நடேச குணசேகரன் திருமண மண்டபத்தில் திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.
2013-14 தலைவர் எஸ்.நாகராஜன் வரவேற்றார்.செயலாளர் முகமது முஸ்கீர் செயலறிக்கை வாசித்தார் .
பேராவூரணி ரோட்டரி சங்கம் (RI dist 2980-club no;83208) ஐந்தாம் ஆண்டு(2014-15) புதிய நிர்வாகிகளாக தலைவராக என்.பி.நீலகண்டன் ,செயலாளராக என்.நிசோனன்,பொருளாளரக சி.ஏ.பாஸ்கரன் ஆகியோர் பதவியேற்று கொண்டனர்.
ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் என்.கோவிந்தராஜ் தலைமை விருந்தினராக பங்கேற்றார்.துணை ஆளுநர் டாக்டர் சி.வி.பத்மானந்தன் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்து உரையாற்றினார்.
புதிய செயலாளர் என்.நிசோனன் நன்றி கூறினார் .விழாவில் வட்டாட்சியர் இரா.கிருஷ்ணன் ,மருத்துவர்கள் ஜெயபால் ,செல்வி,தொழிலதிபர் எஸ்.டி.டி.சிதம்பரம் ,எஸ்.டி.டி.வெங்கடேசன் ,சரவணா ஜூவல்லர்ஸ் உரிமையாளர் என்.பன்னீர் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.
ரோட்டரி நிர்வாகிகள் டி.ஆர்.முருகேசன் ,கே.பி.எல்.ரமேஷ் ,என்.கௌதமன் ,கே.ஆர்.கிருஷ்ணன் ,பி.அஜ்மீர் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர் .
செய்தி : எஸ்.ஜகுபர்அலி ,
பேராவூரணி.
Please change your web name to Tamilnadu News.
ReplyDelete