.

Pages

Saturday, June 14, 2014

பேராவூரணியில் TNTJ நடத்திய இலவச மருத்துவ முகாம் !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேராவூரணி கிளையும் ,தஞ்சை மீனாட்சி மருத்துவமனையும் இணைந்து பேராவூரணியில் இலவச மருத்துவ முகாமினை நடத்தினர்.
           
சனிக்கிழமை அன்று அபீஸ் பாரா மெடிக்கல் நிறுவனத்தில் நடைபெற்ற முகாமில் இருதயநோய் ,சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு  நோய்களுக்கு சிறப்பு நிபுணர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.
                 
அரசு மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் வி.செல்வி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் .மீனாட்சி மருத்துவமனை மருத்துவர்கள் ,மேலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் நோயாளிகளை பரிசோதித்தனர்.
           
டிஎன்டிஜே மாநிலச்செயலாளர் அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி,தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் சம்பை சாதிக்பாட்சா ,மாவட்ட மருத்துவ அணி தலைவர் கே.சலீம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர் .கிளைத்தலைவர் எம்.ஜெயினுல்ஆபிதீன் தலைமையில் கிளை நிர்வாகிகள் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.135 நபர்கள் முகாமில் புறநோயாளிகளாக கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர் .

செய்தி : எஸ்.ஜகுபர்அலி ,
பேராவூரணி.
படம் : பாரூக் முகமது.

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.