.

Pages

Saturday, August 2, 2014

தண்ணீர் தொட்டி அமைத்து தரக்கோரி கடற்கரைத்தெரு ஜமாத்தினர் பேரூராட்சியிடம் முறையீடு !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி கடற்கரைதெரு. இந்த பகுதியில் அவ்வபோது தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருவதை கருத்தில் கொண்டு அப்பகுதியினர் சம்பந்தபட்டோரிடம் முறையிடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

கோரிக்கை வைப்பதில் அதிரையில் வசிக்கும் மற்ற பகுதியினருக்கு முன்மாதிரியாக திகழும் கடறகரைதெரு ஜமாத்தினர் நேற்று மாலை அதிரை பேரூராட்சிக்கு நேரடியாக சென்று பேரூராட்சி தலைவர், துணை தலைவர், செயல் அலுவலர் ஆகியோரை சந்தித்து தங்கள் பகுதிக்கு தனி தண்ணீர் தொட்டி அமைத்து தர முறையிட்டனர். மேலும் கடற்கரைதெரு பகுதிகளில் குமிந்து காணப்படும் குப்பை கூளங்களை அள்ளுவதற்கு உதவும் குப்பை வண்டியை ஜமாத் சார்பாக சொந்த செலவில் வழங்க தயாராக இருப்பதாகும் கூறினர்.

சந்திப்பின் பலனாக கோரிக்கையை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பேரூராட்சியின் சார்பில் உறுதியளிக்கப்பட்டது. இதில் கடற்கரைதெரு ஜமாத்தினர், அமீரக அமைப்பின் பொறுப்பாளர்கள், வார்டு கவுன்சிலர் பசூல்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.