தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள மகாராஜசமுத்திரம் லெட்சத்தோப்பில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஏழை விவசாயிகள், பொதுமக்கள், பெண்கள் அடகு வைத்த நகை கடனில் மோசடி செய்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தை அறிவித்தனர்.அதனையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
மகாராஜசமுத்திரம் லெட்சத்தோப்பில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகைகளை அடகு வைத்து பொதுமக்கள் பெற்ற நகைக்கடனில் சுமார் 68 லட்சம் ரூபாய் அளவில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும், சங்க நிர்வாகிகள், அதிகாரிகள், ஊழியர்கள் ஒத்துழைப்புடன் மோசடியாக கூடுதல் தொகைக்கு அடகு வைத்து அலுவலர்கள் மோசடி செய்ததாகவும், பணம் செலுத்தியும் நகைகள் திரும்ப கிடைக்கவில்லை என்றும் பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் பொதுமக்கள் பட்டுக்கோட்டை நகர்மன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் எம்.ஆர்.செந்தில்குமார் மற்றும் தமிழ்நாடு தெய்வீகத் தமிழ்புரட்சி பாசறை நிறுவனரும், சமூக ஆர்வலருமான ஆதி.மதன கோபால் தலைமையில் தஞ்சை மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.
பல்வேறு இடங்களில் முறையிட்டும் தங்களுக்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை என கொதிப்படைந்த பொதுமக்கள், தமிழக முதல்வரின் கவனத்திற்கு சென்றால் தங்களுக்கு நீதி கிடைக்கும் என கருதி, வரும் ஆகஸ்ட் 5 ந்தேதி செவ்வாய்க்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்மன்ற உறுப்பினர் எம்.ஆர்.செந்தில்குமார் தலைமையிலும், த.தெ.த.பு பாசறை நிறுவனர் ஆதி.மதனகோபால் முன்னிலையிலும் சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். பட்டுக்கோட்டை பகுதியில் சுவரொட்டி ஒட்டப்பட்டு, துண்டறிக்கையும் விநியோகிக்கப்பட்டது.
இந்நிலையில் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அன்று வட்டாட்சியர் பாஸ்கரன் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அரசு தரப்பில் வட்ட வழங்கல் அலுவலர் கணேஸ்வரன், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் நாராயணன், கூட்டுறவு சங்க சார்பதிவாளர் கோவிந்தசாமி, கூட்டுறவு சங்க விசாரணை அதிகாரி சேதுபாவாசத்திரம் சார்பதிவாளர் கௌதமன், காவல்துறை ஆய்வாளர் ஜெகதீசன் உள்ளிட்ட அதிகாரிகளும், பொதுமக்கள் தரப்பில் நகர்மன்ற உறுப்பினர் எம்.ஆர்.செந்தில்குமார், த.தெ.த.பு.பாசறை நிறுவனர் ஆதி.மதனகோபால் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் "நகைக்கடனில் ஊழல் செய்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும். படிக்காத பாமர பெண்களை ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்து, பொய்யான தகவல் கூறி, போலி ஆவணங்கள் தயாரித்து, கூடுதல் நகைக்கடன் உள்ளது போல ஏமாற்றி உள்ளனர்.
எனவே மேலதிகாரிகள் தனியாக முகாம் நடத்தி முறையான கணக்கின் அடிப்படையில் அடகு ரசீது வழங்க வேண்டும். நகை திருப்ப வருபவர்களிடம் சங்கம் வழங்கிய ரசீது படி பணம் பெற்றுக்கொண்டு, உண்மை நகைகளை உடனடியாக வழங்க வேண்டும்.
சங்கம் வழங்கிய ரசீது படி அசல் மற்றும் வட்டித்தொகை செலுத்தி பல மாதங்கள் ஆன் பின்னரும் திருப்பி தராத நகைகளை வழங்க வேண்டும்.இவ்வளவு காலம் இருந்த தொகைக்கு வட்டி சேர்த்து வழங்க வேண்டும் .
மோசடி குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளாமலும், கையாடல் செய்த அலுவலர்களிடம் மோசடி செய்த நகை, பணம் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளாமலும், தகவலை மேலதிகாரிகளுக்கு தெரியாமல் மூடிமறைத்த அதிகாரிகள் மீதுறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதுவரை சங்கத்தை முடக்கி வைக்க வேண்டும்" எனவும் பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
பேச்சுவார்த்தை முடிவில்," முறைகேடுகள் குறித்து 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்ட பிரிவு 81 ன்படி விசாரணை நடத்தப்பட்டது. அதனடிப்படையில் முறைகேடு புகார் குறித்து சென்னை வணிக குற்ற புலனாய்வு கண்காணிப்பாளரிடம் புகார் செய்வது, சங்க வரவு செலவு நகை கடனில் ஊழியர்கள் நிதி கையாடல் செய்த தொகை, இருப்பு குறைவாக உள்ள நகை ஆகியவற்றை விதிகளின் படி, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் திருப்பி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், முறைகேடாக கையாடல் செய்த தொகையை ஊழியர்களிடம் இருந்து வசூல் செய்யவும், சொத்துக்களை பறிமுதல் செய்து மோசடித்தொகையை பொதுமக்களுக்கு திருப்பி தரவும், ஊழியர்கள் மீது பணிநீக்கம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும்" முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து சாலைமறியல் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
செய்தி :
எஸ்.ஜகுபர்அலி,
பேராவூரணி.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.