.

Pages

Wednesday, August 6, 2014

அதிரையில் இரு வேறு இடங்களில் நடைபெற்ற மார்க்க சிறப்பு நிகழ்ச்சியில் மவ்லவி அப்துல் ஹமீது ஷரயி பங்கேற்பு !

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

ஏக இறைவனின் அருளால் இன்று (05.08.2014) அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள மார்க்க அறிஞரும் உளவியல் மருத்துவருமான S.M. அப்துல் ஹமீது ஷரயி அவர்கள் கலந்து கொண்டு 'நவீன சாதனங்களால் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்கள்' என்ற தலைப்பின் கீழ் பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் (ITC) உரையாற்றினார்கள்.

இன்றைக்கு யூத, நஸரானிக்களின் பிடியில் அறியாமல் சிக்குண்டு, அவர்களின் நடை, உடை , பாவனை மற்றும் அவர்களின் நம்பிக்கையில் நாமும் ஊரித்திளைத்துள்ளதால் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்கள் மற்றும் அதன் அடிப்படை காரணிகாய் அமைந்துள்ள பல்துறை சமூக ஊடகங்களின் போக்கையும் பங்களிப்பையும் சுட்டி விவரித்ததார்.

இன்றைய நவீன கால தகவல் பரிமாற்ற சாதனங்களான பேஸ்புக், டிவிட்டர், மொபைல் போன், இன்டெர்நெட், டிவி, பத்திரிக்கை போன்ற விடயங்களில் இன்றைய இளைய சமுதாயம் மூழ்கிப்போய் நேரத்தை தொலைப்பதையும் மார்க்கத்திற்கு விரோதமான காரியங்களில் ஈடுபடுவதையும் சுட்டி விளக்கி இதுபோன்ற சாதனங்களை எவ்வாறு மார்க்கத்தை அதன் தூய வடிவில் எடுத்துச் சொல்வதற்காக பயன்படுத்த முடியும் என்பதையும், பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை சரியான வழியில் கண்காணித்து இஸ்லாமிய அடிப்படையில் வளர்ப்பதற்குரிய முறைகளையும் குர்அன் ஹதீஸ் ஒளியில் விளக்கினார்.

இறுதியாக, பெண்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் அதில் ஒன்று ஜனாஸாவின் சட்டஙகள் பற்றி எழுப்பப்பட்ட கேள்வி நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அமைந்திருந்தது.

அதிரை தாருத் தவ்ஹீத் (ADT) அமைப்பினர் இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை விரிவாக செய்திருந்தனர்

ALM பள்ளியில் நடைபெற்ற ஆசிரியைகளுக்கான உளவியல் பயிற்சி
04.08.2014 திங்கள் அன்று மாலை ALM பள்ளியின் ஏற்பாட்டின் கீழ் அங்கு பணிபுரிந்து வரும் ஆசிரியைகள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கான உளவியல் ஆலோசணை முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள மார்க்க அறிஞரும் உளவியல் அறிஞருமான S.M. அப்துல் ஹமீது ஷரயி அவர்கள் கலந்து கொண்டு, மாணவமணிகள் ஆசிரியைகளுக்கிடையேயான உறவு, மாணவமணிகளை அவர்கள் பயிற்றுவிக்கும் போது கைகொள்ள வேண்டிய அணுகுமுறைகள், மாணவமணிகளை தேர்வுக்காக தயார் செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள் என பல்வேறு உளவியல் ஆலோசணைகளை வழங்கினார்.

முகாமின் இறுதியில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் ஆசிரியைகள் அனைவரும் குறிப்பாக மாற்றுமத ஆசிரியைகள் கூட மிகுந்த ஆர்வத்துடன் தங்களின் சந்தேகங்களுக்கு பதில் பெற்றுச் சென்றனர்.

இம்முகாம் சிறப்புடன் நடைபெற அதிரை தாருத் தவ்ஹீத் ஒத்துழைப்புடன் சிறப்பு ஏற்பாடுகளை ALM பள்ளியின் தாளாளர் அப்துல் ரஜாக் அவர்கள் செய்திருந்தார்கள்.

செய்தி மற்றும் படங்கள் :
அதிரை அமீன்

2 comments:

  1. இவர்களின் பயான் நான் ஃபஸ்புக்கிலே நிறைய பார்த்து வீடியோ பயானும் கேட்டிருக்கின்றேன் சிறந்த அறிஞர் எல்லோரையும் கவரக்கூடிய அளவில் உரையாற்றுவார்கள்

    ReplyDelete
  2. சென்ற வருடம் ஊரில் இருந்தபோது த த ஜ சுலைமானை வைத்து எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்தியது நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி என்பதால் நடுவில் திரை போடாமல் நிகழ்ச்சி நடத்தினார்கள் அப்பே தாரூத் தவ்ஹீதின் ஆதரவாளர்கள் இப்படி நிகழ்ச்சி நடத்தலாமா என்று போங்கி எழுந்தார்கள் இப்பே அவர்கள் நடத்தும் நிகழ்ச்சியிலும் நடுவில் திரை போடவில்லை (இதுதான் மார்க்கம்) அப்போ போங்கி எழுந்தவர்கள் அதை ஊரில் உள்ள அனைவரிடமும் பரப்பியவர்கள் இப்போ வாய்முடி அமைதியாக இருப்பதன் காரணம் என்ன? இப்படி நடக்கும் உங்களை கொள்கையற்றவர்கள் என்று விமர்ச்சனம் செய்வதில் என்ன தவரு இருக்கு

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.