.

Pages

Wednesday, March 11, 2015

தஞ்சை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நோயாளி திடீர் மரணம் !

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள கோவில் பத்து பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (54). விவசாயி. இவர் கடந்த சில நாட்களாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார்.

அவர் சிகிச்சைக்காக தஞ்சை மேரீஸ் கார்னர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தார். பின்னர் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறி உள்ளனர். அதன் படி இன்று காலை அறுவை சிகிச்சை நடைபெற்றது.

அறுவை சிகிச்சை முடிந்து கோவிந்தராஜை வார்டுக்கு கொண்டு வந்தனர். சற்று நேரத்தில் அவர் இறந்தார். இதனால் அவரது மகன் சிவராஜ் அதிர்ச்சி அடைந்தார். டாக்டர்களின் தவறான சிகிச்சையே தனது தந்தை மரணத்துக்கு காரணம் என கருதினார்.

அவர் நன்னிலத்தில் உள்ள உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்கள். இதனால் அங்கு பதட்டம் நிலவியது.

கண்ணாடிகளை உடைக்கும் போது சிவராஜ் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்த தஞ்சை தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தாஸ், சப்–இன்ஸ்பெக்டர்கள் சார்லஸ், சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் உடைக்கப்பட்ட அறையை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதே ஆஸ்பத்திரியில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஊராட்சி மன்ற தலைவி அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இறந்தார். தற்போது மேலும் ஒருவர் இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறந்த கோவிந்தராஜூக்கு ஜெயந்தி என்ற மனைவியும், சிவராஜ், பிரிதிவிராஜ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர் முன்னாள் எம்.எல்.ஏ. ஆடுதுறை பன்னீர் செல்வத்துக்கு உறவினர் ஆவார்.

நன்றி:மாலை மலர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.