.

Pages

Tuesday, March 10, 2015

புதுமனை தெரு வடிகால் பணியை துரிதமாக முடித்து தர பொதுமக்கள் கோரிக்கை !

அதிரை புதுமனைதெருவின் பிராதான சாலையாக கருதப்படுகிறது பேராசிரயர் முஹம்மது அப்துல் காதர் அவர்கள் வீட்டின் எதிரே அமைந்துள்ள இருபகுதியை இணைக்கும் சாலை. இந்த சாலையை பெண்கள் மதரஸா, செக்கடி பள்ளி, சிஎம்பி பகுதி சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு சென்று வர பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சாலையின் குறுக்கே அமைந்துள்ள வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்யும் பணி அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. பணியின் போது சாலையின் மேற்பகுதி பெயர்த்து எடுக்கப்பட்டது. சாலை பள்ளமாக காட்சியளிப்பதால் இந்த வழியே இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்வோரும் நிலை தடுமாறி கீழே விழுந்து அடிபடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பிக்கப்பட்ட வடிகால் பணியை துரிதமாக முடித்து தர சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

3 comments:

  1. தகுதியில்லாத வேட்பாளரை தேர்ந்தெடுத்த மக்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் வார்டு கவுன்சிலர்களை தொந்தரவு செய்யாதவரை விடிவுகாலம் பொறக்காது

    ReplyDelete
  2. சில கௌன்சிளர்கள் ஆக்டிவாகத்தான் இருக்கிறார்கள் அவர்களிடம் முறையிட்டாலும் ஆள் பற்றாக்குறைன்னு சொல்லிவிடுவார்கள், அளவுக்கு அதிகமாக அரசுக்கு வருமானம் வரும் ஊரில் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கு.

    நாம் அரசுக்கு செலுத்த வேண்டியதை உடனே செலுத்தி விடுகிறோம் அரவர்களுக்கு கிடைக்க வேண்டியதும் கிடைத்து விடுகிறது ஆனால் நமக்கு ஏமாற்றம் தான், எல்லோருமா தஞ்சை கலக்டர் பார்த்து மனு கொடுக்க முடியும்?

    எல்லா கௌன்சிலரும் சேர்ந்து ஒரு நூதனப் போராட்டம் பண்ணி அரசு கவனத்துக்கு கொண்டு போகணும், எல்லா தெருவிலும் இதே பிரச்னை இருக்கு. போராடத்தான் மக்கள் முன்னுக்கு வரமாட்டேங்கிறாங்க.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.