.

Pages

Wednesday, March 11, 2015

அதிரை அருகே தீயில் கருகிய மூதாட்டி பரிதாப பலி !

அதிரை அருகே உள்ள மதிரங்காடு பகுதியில் வசித்து வந்தவர் சீதையம்மாள் ( வயது 95 ), இவர் சம்பவத்தன்று சிமினி விளக்கை ஏற்றி வைத்துவிட்டு தூங்கியுள்ளார்.

இந்தநிலையில் எதிர்பாராதவிதமாக அந்த விளக்கு தூங்கிக்கொண்டிருந்த சீதையம்மாள் மீது விழுந்தது. இதில் விளக்கு உடைந்து அதில் ஏற்றிவைக்கப்பட்டிருந்த தீ இவரது துணியில் பற்றியது. அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அனைவரும் எழுந்து வந்து பார்த்தனர்.

அப்போது சீதையம்மாள் உடலில் தீ பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பற்றிய தீயை அணைத்து தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அதிரை சப்–இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.