.

Pages

Tuesday, March 3, 2015

புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் மேலத்தெரு மைதானம் !

அதிரை பெரிய ஜும்மா பள்ளி பின்புறம் மேலத்தெருவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகள், திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த மைதானம் செடிகளால் மண்டிக்காணப்படுவது அப்பகுதியில் வசிக்கும் விளையாட்டு ஆர்வலர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த மைதானத்தில் பல்வேறு கால கட்டங்களில் ஏராளமான விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை நிருபித்து காட்டி இருக்கின்றனர். இந்த மைதானம் பொலிவிழந்து காட்சியளித்தது விளையாட்டு வீரர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. இது குறித்து கடந்த அன்று [ 17-12-2014 ] 'பொலிவிழந்து காட்சியளிக்கும் மேலத்தெரு மைதானம் !' என்ற தலைப்பில் அதிரை நியூஸில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக அமீரக TIYA நிர்வாகத்தினர் மைதானத்தை தூய்மை செய்து கொடுப்பதாக அப்போது உறுதி அளித்து இருந்தனர். இது குறித்து அமீரக TIYA தலைவர் அப்துல் மாலிக் சார்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் TIYA நிர்வாகத்தின் சார்பில் இன்று காலை முதல் ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு மைதானம் சீரமைக்கப்பட்டது. புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் மேலத்தெரு மைதானத்தை அமீரக TIYA தலைவர் முஹம்மது மாலிக், M.M.S அப்துல் கரீம், V.T. அஜ்மல்கான் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

1 comment:

  1. வாழ்த்துகள்! மற்ற தெரு ஜமாத்தார்களும் இந்த பணிகளை முன்மாதிரியாக எடுத்து செயல்பட்டால் அதிரை புதுப் பொலிவு பெரும் என்பதில் சந்தேகமில்லை!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.