.

Pages

Saturday, March 7, 2015

அதிரையின் பிரதான சாலைகளில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளை போலீசார் மடக்கி பிடிக்க பொதுமக்கள் வேண்டுகோள் !

தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை சார்பில் அதிரை பேருந்து நிலையத்திலிருந்து சேர்மன்வாடி வழியாக 800 மீட்டர் தொலைவில் பட்டுக்கோட்டை செல்லும் சாலையை, 7 மீட்டர் அகலத்தில் சாலை மேம்படுத்தும் பணி சுமார் ₹ 1.50 கோடி மதிப்பீட்டில் நடந்து முடிந்தது. பணிக்கு பிறகு சாலை ஏற்கனவே இருந்த அளவை வீட சற்று உயரமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியே சரக்குகளை அளவிற்கு அதிகமாக ஏற்றிசெல்லும் லாரிகளால் மின்கம்பிகள் - கேபிள் வயர்கள் அறுந்து கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சாலையின் உயரம் சற்று கூடியிருப்பதால் இந்த சாலை வழியே செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக காட்சியளிக்கின்றன. இவற்றின் உயரத்தை சற்று உயர்த்தி அமைக்க மின்சார வாரியம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மின்கம்பிகளை உரசும் அளவிற்கு அதிகமாக பொருட்களை ஏற்றிச்செல்லும் லாரிகளை போலீசார் மடக்கி பிடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 comment:

  1. பொதுமக்களே மடைக்கி நல்லது, இல்லை லஞ்சம் குறுக்கே வரும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.