.

Pages

Monday, March 2, 2015

சவூதி அரசு ஜாகிர் நாயக்குக்கு சிறப்பு விருது வழங்கி கெளரவிப்பு !

இஸ்லாமிய சொற்பொழிவுகள் மற்றும் பேருரைகளின் மூலம் உலகெங்கிலும் உள்ள அரபு மொழி பேசாத இஸ்லாமியர்களிடையே நன்கு அறிமுகமாகியுள்ள ஜாகிர் நாயக் (49), இந்தியாவில் உள்ள இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.

மும்பையை சேர்ந்த இவர் இஸ்லாமுக்கு ஆற்றியுள்ள தொண்டினையும், சேவையையும் சிறப்பிக்கும் வகையில் சவுதியின் புதிய மன்னர் சல்மான் நேற்று பரிசு வழங்கி கவுரவித்தார். மன்னர் ஃபைசல் சர்வதேச பரிசு என்ற பெயரில் இஸ்லாமிய சேவை, இஸ்லாமிய கல்வி, அரபுமொழி மற்றும் இலக்கியம், மருத்துவம், அறிவியல் என 5 பிரிவுகளின்கீழ் இந்த சிறப்புக்குரிய பரிசு ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது.

அவ்வகையில், இஸ்லாமிய சேவை என்ற சிறப்பு பிரிவுக்கான பரிசுக்கு இந்தியரான ஜாகிர் நாயக் இவ்வாண்டு (2015) தேர்வு செய்யப்பட்டார்.

சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள மன்னரின் அரண்மனையில் நேற்று நடைபெற்ற விழாவில் இஸ்லாமுக்கு சேவை ஆற்றியது, மற்றும் அமைதி என்ற இயக்கத்தின் பெயரால் தொலைக்காட்சி சேனல் நடத்தி வருவது, இஸ்லாம் பற்றி பிறருக்கு கற்பித்து வாழ்நாள் சாதனை புரிந்தது போன்றவற்றுக்காக இந்த சிறப்புக்குரிய பரிசு வழங்கப்படுவதாக இந்த பரிசுடன் வழங்கப்பட்ட கையினால் எழுதப்பட்ட பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான ரொக்கப்பணம், 24 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட பதக்கம் ஆகியவை இந்த பட்டயத்துடன் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டன.

இந்த பரிசளிப்பு விழாவில் மன்னர் சல்மான் மற்றும் அவரது குடும்பத்தினர், சவுதி அரசின் மந்திரிகள், உயரதிகாரிகள் பலர் பங்கேற்றனர். பரிசை பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்து பேசிய ஜாகிர் நாயக், ’ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்கும் அமைதியை வழங்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம்’ என்று குறிப்பிட்டார்.

நன்றி:மாலைமலர்

1 comment:

  1. வாழ்த்துக்கள், ஜாகிர் நாயக் அவர்களின் சேவைப் பாராட்டி சௌதி மன்னர் பரிசு கொடுத்து இருக்கும்பொழுது ஏன் நம் தமிழ் நாட்டில் குடுமி சண்டை போடுபவர்களை யாரும் கூப்பிட்டு பரிசு கொடுக்க மாட்டேன்கிறார்கள்?. இவரை கொஞ்சம் இங்கே அழைத்து வரக்கூடாதா? பிரிந்து கிடக்கும் இயக்கங்களை ஒன்று சேர்க்க இவருதான் சரியான ஆளுன்னு நினைக்கிறேன் நீங்க என்ன சொல்றீங்க?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.