நமதூருக்கு பி.எஸ்.என்.எல். பிராண்ட் பேண்ட் இன்டர்நெட்
சேவை 2006-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 08-தேதி
முதல் தொடங்கப்பட்டது.
2004-ம் ஆண்டு முதல் 2006-ம் அண்டு
வரை அன்று என்னுடைய தனிப்பட்ட கடும் முயற்சிக்குப்பின் இந்த சேவை அதிரையில் தொடங்கி
வைக்கப்பட்டது.
தஞ்சாவூர், கும்பகோணம், அதிரை வழித்தடங்களில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை,
மதுக்கூர் ஆகிய ஊர்கள் இருந்த படியினால், அதிரைக்கு கிடைத்த அன்றே இந்த
ஊர்களுக்கும் பிராண்ட் பேண்ட் இன்டர்நெட் சேவை கிடைத்தது.
அதிரையில் முதன் முதலாக பி.எஸ்.என்.எல் பிராண்ட் பேண்ட்
இன்டர்நெட் சேவை இணைப்பு எனக்குத்தான் வழக்கப்பட்டது.
பி.எஸ்.என்.எல். பிரண்ட் பேண்ட் இன்டர்நெட் சேவை அதிரையில்
தொடங்கி 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தோடு ஒன்பது ஆண்டுகள்
நிறைவு பெறும்.
இந்த ஒன்பது ஆண்டுகளில் இந்த ஆண்டு 2015, பிப்ரவரி 06-ம் தேதியில்
தான் முதன் முதலாக ஒரு வாரத்திற்கும்
மேலாக இந்த சேவை அதிரையில் முக்கால் வாசி பேர்களுக்கு கிடைக்காமல்
துண்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
காரணம், பொதுப்பணித் துறை மற்றும்
நமதூர் பெரூராட்சியால் சாலை, வாய்க்கால் வடிகால், குடிநீர் வழித்தடம் மற்றும்
தார்ரோடு சாலை மேம்பாட்டு பராமரிப்புகளுக்காக சேர்மன் வாடி பஸ் நிறுத்தம் அருகில் வெள்ளிக்கிழமை
அதிகாலை-06/02/2015-நள்ளிரவு 12.00மணி முதல் கனரக
இயந்திரங்களைக் கொண்டு வேலை துவங்கப்பட்டதினால் அப்பகுதியிலிருந்து பிரிந்து
அதிரையின் பல பகுதிகளுக்கு பல கேபிள்களில் செல்லும் தொலைபேசி மற்றும் இன்டர்நெட்
இணைப்பு கேபிள்கள் துண்டிக்கப்பட்டு அதிரையில் பல பகுதிகளுக்கு தொலைபேசி மற்றும்
இன்டர்நெட் சேவை முற்றிலும் நின்று விட்டது.
இதன் காரணத்தால், அதிரை நகரிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும்,
ஆணை விழுந்தான் குளம் பகுதி, ஆஸ்பத்திரி தெரு, செட்டித்தெரு, தச்சத்தேறு,
செக்கடித்தெரு, நடுத்தெரு, காலியார் தெரு,
நேசவுகாரத் தெரு, கீழத்தெருவில் சிலர், மேலத்தெருவில் சிலர், புதுமனைத்தெரு,
சிம்பி லைன், வள்ளியம்மை நகர், மரியம் பள்ளி நகர், மிலாரிக்காடு, கல்லுக்கொல்லை,
அம்பேத் கார் நகர், வண்டிப்பேட்டை, ஆலடித் தெரு, புது ஆலடித்தெரு, புதுக்கோட்டை
உள்ளூர், மாளியக்காடு, நடுவிக்காடு, மகிழங்கோட்டை, ஷிபா மருத்துவமனை பகுதி,
மின்வாரியம், மழவேனிற் காடு, பழஞ்சூர், மதுக்கூர் ரோடு ஆகிய இடங்களுக்கு இந்த சேவை
முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வை உலகளாவிய அதிரையர்கள் இணையத்தின் மூலமாக
அறிந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிரையில் பி.எஸ்.என்.எல். பிராண்ட் பேண்ட் இன்டர்நெட் சேவை
துண்டிக்கப்பட்ட நாள், நேரம், காலம் அடங்கிய அட்டவணை பின்வருமாறு இருக்கும்.
(0). 06/02/2005 from Fri Early Morning 12.00am = 0hrs
(1). 07/02/2015 to Sat Early Morning 12.00am = 24hrs
(2). 08/02/2015 to Sun Early Morning 12.00am = 48hrs
(3). 09/02/2015 to Mon Early Morning 12.00am = 72hrs
(4). 10/02/2015 to Tue Early Morning 12.00am = 96hrs
(5). 11/02/2015 to Wed Early Morning 12.00am = 120hrs
(6). 12/02/2015 to Thu Early Morning 12.00am = 144hrs
(7). 13/02/2015 to Fri Early Morning 12.00am = 168hrs
(8). 14/02/2015 to Sat Early Morning 12.00am = 192hrs
(9). 15/02/2015 to Sun Early Morning 12.00am = 216hrs
(10). 16/02/2016 to
Mon Early Morning 12.00am = 240hrs
(11). 17/02/2015 to
Tue Early Morning 12.00am = 264hrs
(12). 18/02/2015 to
Wed Early Morning 12.00am = 288hrs
விடிந்தால் வெள்ளிக்கிழமை (06/02/2015) நள்ளிரவு 12.00-மணிக்கு
துண்டிக்கப்பட்டதினால், அந்த நேரத்தையே முதல் நேரமாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதில் ஒரு சில பேர்களுக்கு திங்கட்கிழமை 09/02/2015-இந்த
தினத்தில் இணைப்பு சரிசெய்யப்பட்டு கிடைத்துள்ளது.
எனக்கு புதன்கிழமை 11/02/2015-இந்த தினத்தில்
பிற்பகல் 3.00pm-மணிக்கு இணைப்பு கிடைத்தது. எனக்கு
துண்டிக்கப்பட்ட மொத்த நேரம்கள் 120+15=135மணி நேரம்கள்.
BSNL Broad Band Internet - SUMMARY OF
CHARGES.
My Monthly Charges for Broad Band Unlimited Rs 825.00
Service Tax 12.00%
(on monthly fixed charge 825.00) Rs 99.00
Education CESS 2.00% (on 12% Service
Tax 99.00) Rs 1.98
Higher Edu. CESS 1.00% (on 12% Service Tax 99.00) Rs 0.99
TOTAL CHARGES FOR 30 DAYS (720Hrs) Rs
926.97
For One Hour - Rs: 926.97/ Hrs for 30 Days 720 = Rs
1.29
Non working Hrs and Deduction
amount = 135Hrs X Rs 1.29 = Rs 174.15
பி.எஸ்.என்.எல் பிராட் பேண்ட் இன்டர்நெட் இணைப்பு கிடைக்காமல்
துண்டிக்கப்பட்டவர்கள் மேலே கணக்கிடப்பட்டதுபோல் நீங்களும் கணக்கிட்டு பார்க்கலாம்.
எனக்கு 135 மணிநேரங்கள் துண்டிக்கப்பட்டது, ஆகவே
ரூபாய் 174.15-ஐ என்னுடைய அடுத்த பில்லில் கழிக்கவேண்டும்.
இது குறித்து விண்ணப்பம் எழுதினால்தான் அவர்கள் கழிப்பார்கள். இதேபோல்
பாதிக்கப்பட்டவர்களாகிய நீங்களும் விண்ணப்பம் மூலம் தெரிவித்தால் உங்களுக்கும்
இந்த சலுகை கிடைக்கும்.
குறிப்பு:-
2007-ம்
வருடம் மே மாதம் இப்படித்தான் ஒரு சம்பவம் நடந்தது. அப்போதும் எனக்கு இதுமாதிரி
கழிவு கிடைத்தது. மேலும் விபரங்களுக்கு இதில் இணைக்கப்பட்டுள்ள இணைப்பை பாருங்கள்.
My Complaint letter:
By Fax Mr.Rathinavelu, CAO TR. on 11/June/2007
Refax to GM on 18/July/2007
Letter from BSNL.
BSNL Bill. Dated 07/Aug/2007
Letter from Account Officer.
Order for to Pay Bill.
Total Bill Amount = Rs: 109+900+121+4=1134.00
Discount Amount = Rs: 180.00.
Paid Amount = Rs: 954.00 on 09/Aug/2007
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
Human
Rights and Consumer Rights Included.
Thanjavur
District Organizer. Adirampattinam-614701.
kmajamalmohamed@gmail.com
யாரும் அறிந்திராத தகவல்...ஆதாரத்தோடு விளக்கிருப்பது அருமை..
ReplyDeleteவிழிப்புணர்வூ மன்னன் ! அன்பு நண்பர் கோ.மு.அ. ஜமால் முஹம்மது. அவர்களுக்கு நன்றி! பாராட்டுக்கள் !!!!!
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல்கள்!
ReplyDeleteபாராட்டுக்கள்!