தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 4 சுற்றுகளாக இந்திர தனுஷ் சிறப்பு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்திர தனுஷ் சிறப்பு தடுப்பூசி முகாம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் என்.சுப்பையன் தலைமையில் நடைபெற்றது.
ஆலோசனைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் மூலம் அரசால் மார்ச் 25இல் தொடங்கப்பட்டு நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மாதந்தோறும் ஆறு நாட்கள் சிறப்பு முகாம்களாக நான்கு சுற்றுகளில் மாநகராட்சி பகுதிகளில் நடத்தப்படவுள்ளது.
இம்முகாமின் முக்கிய நோக்கம் 2 வயதுக்குட்பட்ட தடுப்பூசிக்கு விடுபட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளை கண்டறிந்து அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.
இந்த தடுப்பூசியினால் காசநோய், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, மஞ்சள் காமாலை ‘பி’, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் தட்டம்மை போன்ற 7 நோய்கள் வராமல் இந்த தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளது.
தஞ்சாவூர் மாநகராட்சியில் இந்த திட்டம் முதல் சுற்று 21.05.2015 முதல் 29.05.2015 வரையிலும் இரண்டாவது சுற்று 22.06.2015 முதல் 30.06.2015 வரையிலும் வழங்கப்படுகிறது.
மேலும் மூன்றாவது சுற்று 23.07.2015 முதல் 31.07.2015 வரையிலும் மற்றும் நான்காவது சுற்று 24.08.2015 முதல் 31.08.2015 வரையிலும் அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.
அனைத்து சுற்றுகளுக்கு 85 முகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொது சுகாதாரத்துறை சார்ந்த செவிலியர்கள், மருத்துவ அலுவலர்கள் என 120 களப்பணியாளர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர். 114 தடுப்பூசி அமர்வுகள் செயல்படுத்தப்படவுள்ளது. அனைத்து மையங்களிலும், காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அங்கன்வாடி மையங்கள், நகராட்சி மருத்துவ சேவை மையங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படும்.
இச்சிறப்பு தடுப்பூசி முகாம்களில் மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் தவறாது கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்.
ஆலோசனைக் கூட்டத்தில் கும்பகோணம் சார் ஆட்சியர் திரு. ம.கோவிந்தராவ், பயிற்சி உதவி ஆட்சியர் திரு.சி.அருண்தம்புராஜ், சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் டி.மீனாட்சி, மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பி.ஜி.சங்கரநாராயணன், துணை இயக்குநர் டாக்டர் சுப்பிரமணி, நகர்நல அலுவலர் டாக்டர் எஸ்.செந்தில், டாக்டர் சிங்காரவேல், மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.