அதிரை ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் [ AFCC ] நடத்தும் 10 ம் ஆண்டு மாவட்ட அளவிலான மாபெரும் டி20 கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த [ 18-04-2015 ] அன்று ஷிஃபா மருத்துவமனை எதிர்புறம் அமைந்துள்ள கிராணி விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த போட்டிகளில் மாவட்ட அளவில் தலைசிறந்த பல்வேறு அணிகள் விளையாடி வந்தனர். இந்நிலையில் தொடர்போட்டியின் இறுதி ஆட்டம் இன்று மாலை துவங்கியது. இன்றைய இறுதி ஆட்டத்தில் தஞ்சை போலீஸ், தஞ்சை ஸ்ரீ கணேஷ் ஆகிய இரு அணிகளும் விளையாடியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் தஞ்சை ஸ்ரீ கணேஷ் அணியினர் வெற்றி பெற்றனர். முன்னதாக தஞ்சை ஸ்ரீ கணேஷ் அணியினர் 159 / 10 எடுத்து, 160 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
ஆட்டத்தின் முடிவில் வெற்றி பெற்ற அணியினருக்கும், தொடர் போட்டியில் சாதனை நிகழ்த்திய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதில் முதல் பரிசை தஞ்சை ஸ்ரீ கணேஷ் அணியினரும்,தஞ்சை போலீஸ் அணியினர் இரண்டாம் இடத்தையும், மூன்றாம் இடத்தை AFCC அணியினரும், நான்காம் இடத்தை தஞ்சை டிஸ்ட்ரிக் அணியும் பரிசுகளை பெற்றது. சிறந்த பந்து வீச்சாளருக்கான சிறப்பு பரிசினை சலீம் - AFCC அணியை சேர்ந்த சலீம், சிறந்த ஆல்ரவுண்டருக்கான சிறப்பு பரிசினை AFCC அணியை சேர்ந்த நிஜார், சிறந்த ஆட்ட நாயகன் விருதினை ஜோஸப், சிறந்த தொடர் நாயகன் விருதினை வினோத் ஆகியோர் பெற்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் திரு. ராமச்சந்திரன், விளையாட்டு ஆர்வலர்கள் முஹம்மது இல்யாஸ், முஹம்மது தமீம், AFFA நிர்வாகி சேக் தம்பி, முன்னாள் APCC வீரர் சாதுலி ஆகியோர் வழங்கி கெளரவித்தனர்.
இன்றைய ஆட்ட நடுவர்களாக சலீம், இஸ்மாயில் ஆகியோர் இருந்தனர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் தாஜுதீன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை AFCC நிர்வாகிகள் கமாலுதீன், ஹுசைன், தீனுல் ஹக், இல்முதீன், தாஜுதீன், ஹாசிம், இஸ்மாயில்,சலீம், தமீம் மற்றும் AFCC ஏனைய நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
இன்றைய இறுதி ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டு ஆர்வலர்கள், இளைஞர்கள் மைதானத்திற்கு திரளாக வருகை தந்தனர்.
களத்திலிருந்து அதிரை சாலிஹ்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.