செக்கடி குளத்தை நவீன படுத்தும் முயற்சியில் அப்பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக ஈடுபட்டனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பணிகள் நடைபெற்று வந்தது. அனைத்து பணிகளும் நிறைவுற்றதை அடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நாளை மாலை செக்கடி குளம் நடைமேடை பகுதியில் நடைபெற இருக்கிறது.
விழாவில் சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்துரை வழங்கவும், உள்ளூர் முக்கியஸ்தர்கள் தலைமை, முன்னிலை வகிக்கவும் இருக்கின்றனர். இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட துண்டு பிரசுரத்தில் கூறியிருப்பதாவது:
இது நல்ல விசயம் இதை செய்தவர்களுக்கு இறைவன் எல்ல வழழும் கொடுப்பானவும் ஆமீன்
ReplyDelete