.

Pages

Tuesday, May 26, 2015

இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு சிறந்த கல்வி நிறுவனம் விருது !

அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்களை இனங்கண்டு அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் 'அதிரை நியூஸ் கல்வி விருது - சாதனையாளர்கள் விருது 2015' என்ற பெயரில் விருது வழங்கும் விழா நேற்று மாலை அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அதிரை
அதிரையில் 42 ஆண்டுகால ஆங்கில வழிக்கல்வி சேவை, பள்ளியில் தீனியாத் கல்வி, அஸ்மா உல் ஹுஸ்னா மனனம், மாணவ மாணவிகளுக்கு அரசு கல்வி உதவித்தொகை பெற்று தருதல், பெற்றோர் – ஆசிரியர்  கழகத்தின் சார்பில் கலந்தாய்வுக்கூட்டம், ஆசிரியர் சேமநிதித் திட்டம், மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டிகள், பள்ளியில் நடத்தப்படும் இலக்கிய மன்றம், பள்ளியில் நூலகம் , சாரண மாணவர் அமைப்பு, தேசிய பசுமை படை அமைப்பு, குர் ஆன் ஓதல் மற்றும் மற்றும் மனனப் பயிற்சி வகுப்புகள், ஹிந்தி பயிற்சி உள்ளிட்டவை செயல்படுத்தப்படும் பணிக்காக இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்டது. விருதை பள்ளி முதல்வர் ஆஃப்தா பேகம் வாங்கினார். இவற்றை அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி புல முதல்வர் முனைவர் இளங்கோவன் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

சிறந்த கல்வி நிறுவனம் விருதை பெற்ற இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் ஆஃப்தா பேகம் அவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

1 comment:

  1. ப்ளெக்ஸ் போர்டு, துண்டு பிரசுரம், கட்டண சலுகை என்ற பொய்பிரசாரம் இன்றி வளர்ச்சி மெதுவானதாக இருந்தாலும், நிலையானதாக இருக்க வேண்டும் என்ற கொள்கை கொண்ட பள்ளியாக பொது மக்கள் மனதில் உள்ளது. உலக கல்வி மார்க்க கல்வி போதிக்கும் இடம் என்பதால் நல்லொழுக்கமுள்ள மாணவர்களை உருவாக்குகிறார்கள், வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.