SSLC அரசுப்பொதுத்தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்தது. பள்ளியின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்தது. மாணவிகளை அதிக மதிப்பெண்கள் பெற கூடுதல் கவனம் செலுத்தியது. பெற்றோர் – ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடத்தி நிறை – குறைகளை கேட்டறிதல். அதிகாலை நேரங்களில் மாணவிகளுக்கு போன் செய்து படிப்பதற்கு நினைவூட்டல் உள்ளிட்ட பணிகளுக்காக காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை M. சுராஜ் B.Sc., MA., B.Ed அவர்களுக்கு சிறந்த கல்விச்சேவை விருது வழங்கப்பட்டது. இவற்றை அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி புல முதல்வர் முனைவர் இளங்கோவன் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
கல்விச்சேவை விருது பெற்ற தலைமை ஆசிரியை M. சுராஜ் அவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
சிறந்த மாணாக்களை உருவாக்குவதில் பெரும்பங்கு ஆசிரியஆசிரியர்களிடத்தில் தான் உள்ளது. அந்த வகையில் பாராட்டப்படவேண்டியவர் நீங்கள்.
ReplyDeleteஉங்களின் இந்த கடின. ஒத்துழைப்பும் முயற்சியும் நிச்சயமாக இன்னும் பல திறமையான மாணாக்களை உருவாக்கும்.
வாழ்த்துக்கள்.
கல்வி வியாபாரமாகி வரும் இன்றைய உலகில் வசதி குறைந்த சாதாரண பெற்றோர் எவ்வாறு தங்களுடைய குழந்தைகளை படிக்க வைக்க முடியும்? என்ற நிலையில் இப்பள்ளி ஒரு புகலிடமாகவே இருந்தநிலையில் தனியார் பள்ளிக்கு சவால் விடும் அளவுக்கு உயர்ந்துள்ளது என்றால் அதில் பணிபுரியும் தலையசிரியர், சக ஆசிரிய பெருமக்களின் கடின உழைப்பே காரணம் எனலாம் - வாழ்த்துக்கள்.
ReplyDeleteசகோதரிக்குநல்வாழ்த்துக்கள்
ReplyDelete