அதிரையை சேர்ந்தவர் எம் முஹம்மது இப்ராஹீம். இவர் ஐக்கிய தேசிய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவராக உள்ளார். இந்த நிலையில் தகவல் அறியும் உரிமை சாட்டதின் கீழ் அதிரை பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் எத்தனை குளங்கள் தற்போது உள்ளது ?, மீன் வளர்ப்புக்காக எத்தனை குளங்கள் ஏலத்தில் விடப்பட்டுள்ளன ? குளங்களின் பெயர்கள் என்னென்ன ? என அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டு பதில் பெற்றுள்ளார்.
இதில் அதிரை பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் மொத்தம் 16 குளங்கள் இருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இவருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதில் மீன் பிடிப்புக்காக 10 குளங்கள் ஏலம் விடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஐக்கிய தேசிய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் எம் முஹம்மது இப்ராஹீம் நம்மிடம் கூறுகையில்...
'அதிரை பேரூராட்சியின் கீழ் மொத்தம் 16 குளங்கள் இருப்பதாகவும், அதில் ஆண்டிக்குளம், ஆரியன் குளம், பெருமாள் குட்டை, காட்டுக்குளம், சக்கரை குட்டை, வாணியர் குட்டை, நாயக்கர் குட்டை, பள்ளிக்குட்டை, மன்னப்பன் குளம், செட்டியாங் குளம், வண்ணாங்குட்டை, கருவாட்டுக் குட்டை, ஆதிதிராவிடர் குட்டை, வாளக்குளம், சின்னாங் குளம், வண்ணான் குளம் ஆகியன உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இவற்றில் ஆண்டிக்குளம், ஆரியன் குளம், பெருமாள் குட்டை, காட்டுக்குளம், சக்கரை குட்டை, வாணியர் குட்டை, நாயக்கர் குட்டை, பள்ளிக்குட்டை, மன்னப்பன் குளம், செட்டியாங் குளம் ஆகிய குளங்கள் ஏலம் விடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் நான் கேட்டுள்ள கேள்விகளுக்கு எனக்கு அனுப்பிய பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடிதத்தில் கூறிய குளங்களில் சில தற்போது ஆக்கிரமிப்பால் எங்கு உள்ளது என தெரியவில்லை. இதனால் அதிரை காவல் நிலையத்தில் காணாமல் போன குளங்களை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளிக்க முடிவு செய்துள்ளேன்'. மேலும் இதுதொடர்பாக நீதிமன்றம் மூலமும் நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.
Arumaiyanapathevu
ReplyDeleteமூடி வைச்சிருந்த நகைகள் காணாமல் போவதுண்டு. முற்றத்தில் கட்டிய மாடு காணாமல் போவதுண்டு. இவ்வளவு ஏன்..? மனிதன் கூட தொலைந்து போகலாம். ஆனால் ஒரு ஊரில் இருந்த குளம் காணாமல் போனது என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும்,
ReplyDeleteவண்ணான் குளம்: இது தரகர் தெரு மையவாடியின் கிழக்கு பகுதியில் இருந்தது, தனியார் ஆக்கிரமிப்பால் குளத்தின் அடிச்சுவடு தெரியாதளவுக்கு மண்ணை போட்டு மூடிவிட்டு தென்னை மரத்தை வைத்து விட்டார்கள்; ஜனாப் அஹமது ஹாஜா தலைமையில் அதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது பின்னர் வந்த தெரு நிர்வாகம் ஆக்கிரமித்தவருக்கு ஆதரவாக சுவர் எடுத்து கொடுத்து இருக்கிறார்கள் அதன் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.
அப்பங்குண்டு ( ஆரியன் குளம் என நினைக்கிறேன் ): இக்குளம் ஆண்டிக்குளம் பக்கத்தில் இருந்தது. சேது ரோடு, ஹாஜா நகர் தரகர் தெரு; தைக்கால் தெரு ஆகிய தெருக்களிருந்து வரும் மழை நீர் அப்பங்குண்டு குலத்தை சென்றடையும் நிரம்பி வழியும் தண்ணீர் கடலில் கலக்கும் அந்தக் குலமும் இருந்த இடம் இப்போ காணவில்லை.
அரசியல் வாதி, அரசு அதிகாரி, ஜமாத்தார்கள் இவர்களின் உதவிக்கொண்டு தான் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்கிறார்கள், ஆக்கிரமிப்பாளர்களுக்கு நெஞ்சில் இறையச்சம் இல்லை அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பவர்களுக்கு; பொது மக்களிடம் ஆதரவும் இல்லை. நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க வாழ்த்துக்கள்.
true
ReplyDeleteஅருமை, நல்ல முயற்சி.
ReplyDeleteநல்ல முயற்சி..
ReplyDelete