அதிரை சுரைக்கா கொல்லை பகுதியை சேர்ந்தவர் முஹம்மது ஹசன் இவரது மகன் யாசர் ( வயது 20 ) அதிரையில் தனியார் பிரிண்டிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
அதிரை பெரிய நெவுக்காரத்தெருவை சேர்ந்தவர் கமால் இவரது மகன் சகாபுதீன் ( வயது 28 ). தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். விபத்தில் காயமடைந்தவரை நேரம் காலம் பார்க்காமல் மீட்டுச்சென்று மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியை செய்து வருகிறார்.
இந்த நிலையில் அதிரை ஈசிஆர் சாலையில் இருசக்கர வாகன விபத்தில் யாசர் படுகாயமடைந்து கிடப்பதாக சகாபுதினுக்கு அலைப்பேசியில் தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்த யாசரை மீட்டார். அப்போது திடீரென அங்கு நின்றுகொண்டிருந்த ராமச்சந்திரன், குண்டப்பன் பாஞ்சாலன் ஆகிய இருவரும் சகாபுதீனை ஏன் தாமதமாக ஆம்புலன்ஸ்சை ஓட்டி வந்தாய் ? என கூறி கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சகாபுதினுக்கு காது மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது. தமுமுக ஆம்புலன்ஸ் வாகனத்தின் சைடு கண்ணாடியும் சேதமடைந்தது.
தகவலறிந்த அதிரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாக்கிய இருவரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். படுகாயமடைந்த யாசரை மீட்க வந்த அதே ஆம்புலன்சில் ஓட்டுனர் சகாபுதினை அதிரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிரை தமுமுக சார்பில் அதிரை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.