அமீரகம் ஷார்ஜா மண்டலத்தில் தமீமுன் அன்சாரி ஆதரவாளர்களின் கூட்டம் கடந்த 05-11-2015 அன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு தமுமுக-மமக அமீரக துணைச் செயலாளரும், ஷார்ஜா மண்டல பொறுப்பாளருமான மதுக்கூர் அப்துல் காதர் தலைமை வகித்தார். அதிரை அஷரப் அலி, தோப்புத்துறை அபுல் ஹசன், நெல்லிக்குப்பம் இக்பால், அடியக்க மங்களம் யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. தமுமுக தான் நமது தாய்க்கழகம் என்றும், மமக அதன் அரசியல் பிரிவு என்பதையும், தமுமுக தலைமையில் சமுதாய மற்றும் மார்க்க பணிகளை வீரியத்துடன் எடுத்து செல்வது.
2. ஒற்றுமைக்காக அமீரக நிர்வாகம் எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவது.
3. தாம்பரம் பொதுக்குழுவில் தகுந்த காரணங்களும், ஆதாரங்களும் இல்லாமல் மமக நிர்வாகத்தைக் கலைத்து விட்டு, புதிய நிர்வாகத்தை
ஷார்ஜா மண்டலம் ஏற்க மறுக்கிறது.
4. தகுந்த காரணங்களும் ஆதாரங்களும் நிருபிக்கப்படும் வரை, மாநில பொது செயலாளர் தமீமுன் அன்சாரி தலைமையில் செயல்படக்கூடிய மமக - வுக்கு முழு ஆதரவு என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
ஷார்ஜா மண்டலத்தின் அனைத்து கிளைகளிலும் இந்த நிலைத் தொடர்வது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் அமீரகம் ஷார்ஜா மண்டல தமீமுன் அன்சாரி ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
அதிரை அஷ்ரப் அலி
அஸ்ஸலாமு அலைக்ககும் (வரஹ்)
ReplyDeleteதாங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் ஏன் என்றால் தமுமுக
சமுதாய கோரிக்கை பல வடிவங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் அந்த வகையில் அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை வைத்து ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்யதது முஸ்லிம் லீக் கட்சிக்கு அதிக தொகுதி பெற்று கொடுத்து தனி சின்னத்தில் நிக்க சொன்னது அதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை இனி பிற கட்சியை நம்பி பயன் இல்லை என்று தான் தமுமுக அரசியல் பிரிவு வேண்டும் என்று மமக உதயம் ஆனது தமுமுக மமக வேறு வேறு என்று நிங்கள் நினைத்தால் சமுதாய அக்கறை குறைவு என்று தான் என்ன தொன்றுகிறது தமுமுக வழிநடத்தும் மமக தான் சமுதாயத்திற்கு வேண்டும் அதுதான் சமுதாயத்திற்கு நன்மை தரும் சற்று நேரம் சிந்தனை செயுங்கள் தமுமுக இல்லை என்றால் மீண்டும் 1992 டிசம்பர் 6 காலம் பின்னுக்குத் தள்ளி விட்டு செல்லும் நம் சமுதாயம்