நிகழ்ச்சியில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகபூப் அலி தலைமை உரை நிகழ்த்தினார். 'அதிரை நியூஸ்' ஆசிரியர் சேக்கனா நிஜாம், அதிரை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் நிர்வாக கமிட்டி உறுப்பினர் இத்ரீஸ் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக பள்ளி தமிழ் ஆசிரியர் முனைவர் அஜீமுதீன் வரவேற்புரை ஆற்றினார்.
பயிற்சி முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தஞ்சை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பயிற்றுனர் திரு. துளசி துரை மாணிக்கம் அவர்கள் மாணவர்களுக்கு முதலுதவி செயல்முறை விளக்கம் அளித்தார். இதில் பயிற்சி மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது, மயக்கம், தீ விபத்தில் சிக்கியவர்கள், எலும்பு முறிவு, விஷ வாயுவில் சிக்கியவர்களை மீட்பது, நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது மற்றும் வலிப்பு நோய் குறித்தும் அவர்களுக்கு முதலுதவி செய்வது குறித்தும் செயல்முறை விளக்கத்தில் கூறப்பட்டன.
நிகழ்ச்சி முடிவில் பள்ளி ஆசிரியர் எஸ் குணசேகரன் நன்றி கூறினார். இந்த முகாமில் 200 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )
மருத்துவ விழிப்புணர்வு.. முதலுதவி விழிப்புணர்வு மாணவர்களுக்கு மட்டுமல்ல தற்கால சூழ்நிலையில் எல்லோருக்கும் அவசியமான ஒன்று. இதனை ஊரின் அனைத்து பகுதிகளிலும், செயல் படுத்த வேண்டும். அனைத்து மக்களையும் இதில் ஈடுபடுத்த வேண்டும்.. ரெட்கிராஸ் அதிரையில் தற்போது நண்பர்கள் நிஜாம்,.. இத்ரீஸ் உள்ளிட்ட ஆர்வலர்களை நிர்வாகிகளாக்கியுள்ளதில் மகிழ்ச்சி. இவர்கள் ஊரின் அனைத்து பகுதிகளிலும் இந்த விழிப்புணர்வு பயிற்சி முகாமை நடத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
ReplyDelete