அதிரை நியூஸ்: பிப்-11
36 வயதுடைய ஈமான் அஹமது என்ற உலகின் மிக குண்டான பெண்ணாக கருதப்படும் எகிப்திய பெண் 25 ஆண்டுகளாக சுமார் 500 கிலோ உடம்புடன் நகரக்கூட இயலாத அளவில் ஒரே படுக்கையிலேயே வாழ்ந்து வருபவர் முதன்முதலாக தனது படுக்கையை விட்டும் வீட்டை விட்டும் வெளியேறவுள்ளார்.
இவருக்கு மும்பையை சேர்ந்த டாக்டர் முபஸ்ஸல் லக்டவாலா (Dr. Mufazzal Lakdawala) தனது மருத்துவமனையில் சிகிச்சையளிக்க ஒப்புக்கொண்டதை தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக அவருடைய மருத்துவக் குழுவினர் ஈமான் அஹமது அவர்களை விமானத்தில் சுமந்து இந்தியா கொண்டு வர தேவையான முன்னெச்சரிக்கை சிகிச்கைகளை அளித்து வந்தனர்.
மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொள்ளும் ஈமான் அஹமதிற்காக 'எகிப்து ஏர்லைன்ஸில்' சிறப்பு படுக்கை ஏற்பாடுகளுடன் விமானம் பறக்கும் போது அவசரத்தேவை ஏற்பட்டால் உடனுக்குடன் சிகிச்சையளிக்கும் கருவிகள் மற்றும் டாக்டர் முபஸ்ஸல் லக்டவாலா மருத்துவக் குழுவைச் சேர்ந்த மருத்துவர் அபர்ணா கோவில் பாஸ்கர் (Dr. Aparna Govil Bhaskar) மற்றும் டாக்டர் கம்லேஷ் போரா (Dr. Kamlesh Bohra) ஆகியோர் ஈமான் அஹமதுவின் சகோதரி ஷைமா அஹமது உடன் துணைக்கு வருகிறார்கள்.
டாக்டர் அபர்ணா மற்றும் டாக்டர் கம்லேஷ் போரா ஆகியோர் கடந்த 10 தினங்களுக்கு முன் எகிப்தின் அலெக்ஸான்டிரியா நகருக்குச் சென்று ஈமான் அஹமதுவின் உடல்நிலையை கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அலெக்ஸாண்டிரியாவிலிருந்து மும்பைக்கு நாளை அதிகாலை 4 மணிக்கு வந்திறங்கும் ஈமான் அஹமதுவை விமான நிலையத்திலிருந்து மருத்துவ சாதனங்கள் பொருத்தப்பட்ட சிறப்பு டிரக்கில் ஏற்றி ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு ஸைஃபீ மருத்துவமனையில் (Saifee Hospital) இவருக்கென வடிவமைக்கப்பட்ட சிறப்பு சிகிச்சை அறையில் தங்க வைக்கப்படவுள்ளார்.
இவரை குறித்து அதிரை நியூஸில் வெளியான செய்தியை வாசிக்க:
உலகின் மிகவும் குண்டான எகிப்திய பெண்ணுக்கு இந்தியாவில் சிகிச்சை
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.