.

Pages

Saturday, February 11, 2017

அதிரை ஈசிஆர் சாலை கால்வாயில் வாகனம் தலைகீழாக கவிழ்ந்து விபத்து: புதுமண தம்பதி காயம் !

அதிராம்பட்டினம், பிப்-11
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலை கால்வாயில் வாகனம் தலைகீழாக கவிழ்ந்து விபத்து. புதுமண தம்பதி உட்பட 4 பேர் காயம்.

இராமநாதபுரத்தை சேர்ந்தவர் அகமது அமீன். கடந்த மாதம் மணமுடித்துவர். இவர் தனது மனைவி மற்றும் உறவினர்கள் 2 பேருடன் நாகூர் தர்ஹாவிற்கு கடந்த 13 நாட்களுக்கு முன்பாக இறக்கப்பட்ட புதிய வாகனத்தில் ஈசிஆர் சாலையில் பயணம் மேற்கொண்டார். வாகனத்தை அமீன் ஓட்டிச்சென்றார். வாகனம் பிலால் நகர் ரெயில்வே கேட் அருகே வந்தபோது சாலையில் குண்டு குழியுமாக உள்ள பள்ளத்தை கடக்கும்போது திடீரென முன்பக்க டயர் வெடித்தது. இதில் வாகனம் முழு கட்டுப்பாட்டை இழந்து இடதுபுறத்தில் உள்ள ஏரி வடிகால் கால்வாயில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் பயணம் செய்த ஓட்டுனர் அகமது அமீன் உட்பட 4 பேருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் வாகனத்தில் சிக்கிய 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த அதிராம்பட்டினம் பேருந்து நிலைய வாடகை கார் ஓட்டுனர்கள், இப்பகுதி இளைஞர்கள் கால்வாயில் கவிழ்ந்து கிடக்கும் வாகனத்தை கயிறு கட்டி மீட்டெடுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். பின்னர் பிலால் நகர் ரெயில்வே கேட் அருகே பழுதடைந்து காணப்படும் சாலையால் அடிக்கடி நிகழும் விபத்து குறித்து அதிராம்பட்டினம் காவல் துறையிடம் எடுத்துக்கூறினர். உடனடியாக காவல்துறை சார்பில் சாலையின் இருபுறங்களிலும் வாகன வேகத்தடுப்பு ( பேரி காட் ) அமைக்கப்பட்டது. கால்வாயில் கவிழ்ந்த வாகனத்தைக்காண இப்பகுதியில் கூட்டம் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.