அதிரை நியூஸ்: பிப்-01
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்கிற அருமையான பழமொழி தமிழுக்குச் சொந்தம் ஆனாலும் இங்கே தான் 'அத்தர் மிஞ்சினால் ... என்கிற சொல் வழக்கும் புலங்குகிறது.
பொதுவாக அரேபியர்கள் ராஜாளி பறவைகள் (Falcons) எனும் வேட்டை பருந்துகளை (Hawks) வளர்ப்பதில் அலாதி பிரியமுள்ளவர்கள். அமீரகத்தின் தேசிய பறவையாகவும் இது விளங்குகிறது. மேலும், தேசிய பறவையான ராஜாளிக்கு மனிதர்களுக்கு உள்ளது போல் பிற நாடுகளுக்கு பயணம் செய்ய சிறப்பு பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது என்றால் அரேபியர்களிடத்தில் அதன் மதிப்பை உணர்ந்து கொள்ளுங்கள்.
இந்தப் பாஸ்போர்ட்டுகளை கொண்டு சவுதி, பஹ்ரைன், ஓமன், குவைத், கத்தார், மொராக்கோ, சிரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு விமானத்தில் பறக்கலாம். (சுதந்திரமாக திறந்துவிட்டால் பாஸ்போர்ட்டே இல்லாமல் உலகின் அனைத்து நாடுகளுக்கும் சென்றுவர வல்லவை என்பது வேறு விஷயம்)
சவுதியை சேர்ந்த இளவரசர் ஒருவர் ராஜாளிப்பறவைகளை நேசிப்பவர். இவர் தன்னுடன் எடுத்துச் சென்ற 80 ராஜாளி பறவைகளுக்கும் தனித்தனி இருக்கைகளுக்கான விமான டிக்கெட்டுகள் எடுத்து பயணிக்கச் செய்துள்ளார். இதன் புகைப்படங்களை அந்த குறிப்பிட்ட விமானத்தின் விமானி சமூக வலைத்தளங்களில் கசியவிட பறவையின் வேகத்தையும் மிஞ்சி பரவி வருகிறது.
2015 ஆம் ஆண்டும் ஒருவர் 'பிளை துபை' விமானம் ஒன்றையே முழுமையாக ராஜாளி பறவைகளுக்காக வாடகைக்கு எடுத்துள்ளதும் வரலாறு தான். மேலும், எதிஹாத் மற்றும் கத்தார் ஏர்வேஸ் விமானங்களும் அதிகப்பட்சம் 6 ராஜாளிக்கள் வரை பயணிகள் விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதிக்கின்றன.
Sources: AOL Travel UK / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.