தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி விலங்கியல் மன்ற ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி செவ்வாய்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
தொடக்கத்தில் விலங்கியல் மன்ற அமைப்பாளர் ஏ. அம்சத் வரவேற்றுப் பேசினார். விலங்கியல் துறைத் தலைவர் (பொறுப்பு) எஸ். ரவீந்திரன் அறிமுக உரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பி. சிலார் முஹமது தலைமை வகித்து உரை நிகழ்த்தினார்.
இவ்விழாவில், சிறப்பு விருந்தினர்களாக விலங்கியல் துறை முன்னாள் மாணவர்கள் பட்டுக்கோட்டை கங்கா சரஸ் ஆய்வக இயக்குனர் சி. மணிகண்டன், புதுக்கோட்டை உள்ளூர் ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி தாளாளர் என். உதயகுமார், அதிரை ஹாஜி எஸ்.எம் சேக் ஜலாலுதீன் பி.எட் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஜக்கரியா, பட்டுக்கோட்டை தாலுகா துணை தாசில்தார் கே. தர்மேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு, சுய வேலைவாய்ப்பு மற்றும் அரசுத்துறை சார்ந்த வேலை வாய்ப்புகளை மாணவ, மாணவிகள் பெறுவது குறித்து வழிமுறைகளை எடுத்துரைத்தனர். மேலும் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்கள்.
விலங்கியல் மன்றம் சார்பில் நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டி, கவிதை ஒப்புவித்தல் போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, வினாடி-வினா ஆகியவற்றில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவுப்பரிசுகள், பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
விழாவில் கல்லூரி பேராசிரியர்கள் ஓ. சாதிக், வி. கானப்ரியா, ஏ. மஹாராஜன் ஜே. சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா முடிவில் பேராசிரியர் கே. முத்துகுமாரவேல் நன்றி கூறினார். இவ்விழாவில் கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
Congrats for the winners...end Participants VIPs ,nice programme for Job hunt technology...
ReplyDelete