சவூதி ஜித்தா ஏப் 13: சவூதியில் விபத்தில் சிக்கி கால்களை இழந்து பரிதவித்த தமிழருக்கு அதிரை ரஃபியா அவர்கள் தலைமையில் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் உதவியுடன் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தமிழ்நாடு தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(37) சவூதி அரேபியா ஜித்தாவில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்தார். ஆனால் சில நாட்களில் அங்கிருந்து நிறுவனத்திற்கு தெரியாமல் வெளியேறி ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் அவர் பணிபுரிந்து வந்த பெட்ரோல் பம்பிற்கு அதி வேகமாக வந்த ஒரு கார் அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே அவர் மீது மோதிய காரின் உரிமையளர் தப்பியோடிவிட ஆறுமுகம் விபத்துக்குள்ளான செய்தி தமிழ் அமைப்புகளுக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து ஆறுமுகத்திற்கு ஜித்தா தமிழ் சங்கத்தை சேர்ந்த ரஃபியா, சிராஜ், தாஸ் செந்தமிழ் மன்றம் குணசேகர பாண்டியன் இன்னும் பல தமிழ் ஆர்வலர்கள் உதவி புரிந்து கடந்த 5 மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். எனினும் ஆறுமுகம் ஒரு காலை இழந்து சிரமப்பட்டு வந்தார்.
இதற்கிடையே ஆறுமுகம் ஏற்கனவே பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து ஓடி வந்துவிட்டதால் அவரிடம் பாஸ்போர்ட், குடியுரிமை அட்டை(இக்காமா) எதுவும் இல்லாததால் ஊருக்கு அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் சவூதி அரசு 90 நாட்கள் பொது மன்னிப்பு வழங்கி உத்தரவிட்டதை அடுத்து ஆறுமுகத்திற்கு தமிழ் ஆர்வலர்களின் உதவியுடன் மற்றும் இந்திய தூதரக உதவியுடனும், எமெர்ஜென்சி பாஸ்போர்ட் எடுக்கப்பட்டு அதன் மூலம் உரிய ஏற்பாடுகள் செய்யப்படு கடந்த செவ்வாயன்று இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அவருக்கு பல தமிழர்கள் பொருளாதார ரீதியாகவும் உதவி புரிந்தமை குறிப்பிடத்தகக்து

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.