தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் குலாம் தஸ்தகீர். இவர் கடைத்தெரு பகுதியில் 'ஜல்கோபியா ஜூஸ் கார்னர்' என்ற பெயரில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். கோடை வெயிலின் தாகத்தை தணிக்கும் வகையில் மருத்துவகுணம் வாய்ந்த சோற்றுக்கற்றாழை ஜூஸ் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.
இதுகுறித்து குலாம் தஸ்தகிர் கூறுகையில்;
கற்றாழையில் சோற்றுக்கற்றாழை, பெருங்கற்றாழை, சிறுகற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை, ரயில் கற்றாழை எனப் பலவகை உண்டு. இதில் சோற்றுக்கற்றாழை மருத்துவக் குணம் வாய்ந்தது. பச்சையாக உள்ள சோற்றுக்கற்றாழை உடல் வெப்பத்தைத் தணிக்கிறது.
அதிராம்பட்டினம் அருகே ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், கூடலிவயல், தம்பிக்கோட்டை, மறவக்காடு ஆகிய கிராமப் பகுதிகளில் சோற்றுக்கற்றாழை அதிகளவில் கிடைக்கின்றன. இதன் தோல் பகுதியை சீவி விட்டு ஜெல்லி போல் இருக்கும் உள்பகுதியை எடுத்து மோருடன் மிக்சியில் கரைத்து ஜூஸ் தயார் செய்கிறேன்.
சோற்றுக்கற்றாழையின் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் பளிங்கு போல ஜொலிக்கும். கற்றாழை ஜெல்லை மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.
உடல் சூட்டை தணிக்கப் பயன்படும் சோற்றுக்கற்றாழை ஜூஸ் ஒன்றின் விலை ரூ.20. தினமும் 100 ஜூஸ் வரை விற்பனையாகிறது. அதிகளவில் இளைஞர்கள் விரும்பிப் பருகுகின்றனர்' என்றார்











Aloevera ... herbal supplement.. Good for health
ReplyDelete