![]() |
| கோப்புப்படம் |
தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுக்கும் பொருட்டு விபத்தில்லா மாவட்டமாக உருவாக்கிட மாவட்ட நிர்வாகம் வட்ட அளவில் குழுக்களை அமைத்து மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி சாலைபாதுகாப்பு குறித்து அனைத்து மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் மாநில போக்குவரத்து அதிகாரி, போக்குவரத்து ஆணையர் அவர்களது அறிவுரையின்படி பள்ளி செல்லும் மாணவ மாணவியாரின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தினை முறைபடுத்திடவும், ஓட்டுநர்களுக்கு சாலைபாதுகாப்பு பற்றி விழிப்புணர்வை மேம்படுத்திடவும் அனைத்து பள்ளி வாகனங்களையும் ஓரே டேத்தில் ஒரே நாளில் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
அதன்படி 12-05-2018 அன்று காலை 08.00 மணிக்கு தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளி வாகனங்களையும் தஞ்சாவூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்திலும், பட்டுக்கோட்டை பகுதி அலுவலக எல்லைக்கு உட்பட்ட பள்ளி வாகனங்களை அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, கைகாட்டி, பட்டுக்கோட்டை பள்ளி மைதானத்திலும் பதிவுச் சான்று, காப்புச் சான்று, அனுமதிச் சீட்டு, ஓட்டுநர் உரிமம்இ நடத்துனர் உரிமம் மற்றும் பள்ளி சிறப்பு விதிகள் 727/ 2012ன் படி குழுக்களால் நிர்ணயம் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் நடைச்சீட்டு ஆகிய அனைத்து ஆவணங்களுடன் வாகனங்களை கொண்டு வந்து ஆய்வுக்கு உட்படுத்துமாறு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி உரிமையாளர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இந்த ஆய்வுக்கு உட்படாத பள்ளி வாகனங்களின் அனுமதி சீட்டு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.