 |
பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் |
அதிராம்பட்டினம், மே.02
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியின் சமூக மேம்பாடு, ஒற்றுமை, அடிப்படை கட்டமைப்பு வசதியில் தன்னிறைவு போன்ற திட்டங்களை பிரதான நோக்கமாகக் கொண்டு 'அதிரை மேம்பாட்டுச் சங்கமம்' என்ற புதிய அமைப்பின் தொடக்க விழா, பட்டுக்கோட்டை சாலை ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்ட் கதிஜா மஹாலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பஹத் முகமது கிராத் ஓதி விழாவை தொடங்கி வைத்தார். விழாவுக்கு அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.எம் யூசுப் தலைமை வகித்த உரை நிகழ்த்தினார். அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அஸ்ரப் அலி தனது அறிமுக உரையில், அமைப்பின் நோக்கம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, மவ்லவி முகமது யூசுப்,காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், சம்சுல் இஸ்லாம் சங்கச் செயலாளர் பேராசிரியர் அப்துல் காதர், பொருளாளர் பேராசிரியர் செய்யது அகமது கபீர், வழக்குரைஞர் ஏ.முனாப், கவிஞர் எம். அப்துல் ரெஜாக், திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம. குணசேகரன், வழக்குரைஞர் நிஜாமுதீன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
முன்னதாக, ஜே.எம் சம்சுதீன் வரவேற்றுப் பேசினார். விழா முடிவில் ரிழா நன்றி கூறினார். விழாவில் 150 க்கும் மேற்பட்ட அதிரைப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
 |
மவ்லவி முகமது யூசுப் |
 |
பேராசிரியர் அப்துல் காதர், |
 |
வழக்குரைஞர் ஏ.முனாப் |
 |
ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.எம் யூசுப் |
 |
ஒருங்கிணைப்பாளர் அஸ்ரப் அலி |
 |
பேராசிரியர் செய்யது அகமது கபீர் |
 |
கவிஞர் எம். அப்துல் ரெஜாக் |
 |
வழக்குரைஞர் நிஜாமுதீன் |
 |
இராம. குணசேகரன் |
 |
ஜே.எம் சம்சுதீன் |
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.