.

Pages

Monday, October 7, 2019

சவுதியில் சாம்பியன் பட்டம் வென்ற அதிராம்பட்டினம் கிரிக்கெட் (AFCC) அணி!

அதிரை நியூஸ்: அக்.07
சவுதி ஜித்தா தமிழ் பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடர் போட்டி(சிசன் 3) ஜித்தா STC மைதானத்தில் கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்று வந்தது. இதில், ஜித்தா வாழ் தமிழக கிரிக்கெட் வீரர்கள் அடங்கிய மன்சூர் & மொசைட் (M & M), ஜித்தா தமிழ் புல்ஸ் (JTB), சென்னை 11, அதிரை பிரண்ட்ஸ் கிரிக்கெட் (AFCC), சென்னை ஷார்க்ஸ் கிரிக்கெட் கிளப், ஜித்தா தமிழ் எல்லோ புல்ஸ் (TSK) ஆகிய 6 அணிகள் விளையாடினர்.

கடந்த 04/10/2019,வெள்ளிக்கிழமை நடந்த பகல், இரவு நேர அரை இறுதி ஆட்டத்தில், அதிரை பிரண்ட்ஸ் கிரிக்கெட் (AFCC) அணி, மன்சூர் & மொசைட் அணிகள்  விளையாடின. முதலில் பேட் செய்த AFCC, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய மன்சூர், மொசைட் அணியினர் 68 ரன்கள் மட்டுமே எடுத்து இறுதி போட்டியில் விளையாடும் தகுதியை இழந்தது.

பின்னர் நடந்த இறுதி போட்டியில், அதிரை பிரண்ட்ஸ் கிரிக்கெட் (AFCC), ஜித்தா தமிழ் புல்ஸ் (JTB) ஆகிய அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஜித்தா தமிழ் புல்ஸ் (JTB) அணி, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவரில் 86 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய அதிரை பிரண்ட்ஸ் கிரிக்கெட் (AFCC) அணியினர் 7வது ஓவரில் 87 ரன்கள் 3 விக்கெட்டுகளை இழந்து எடுத்து வெற்றி வாகை சூடினர்.

இதையடுத்து, சாம்பியன் பட்டம் வென்ற அதிரை பிரண்ட்ஸ் கிரிக்கெட் (AFCC) அணிக்கு சுழற்கோப்பை பரிசு வழங்கப்பட்டது. மேலும், சிறந்த ஆட்ட நாயகன் மற்றும் சிறந்த மட்டையாளராக‌ முஹம்மது இப்ராஹீம், தொடர் நாயகன் முஹம்மது அஸ்லம் ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஜித்தாவில் வசிக்கும் அதிரையர்கள் கலந்து கொண்டு நமதூர் வீரர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்தனர்.மேலும் ஏராளமானத் தமிழர்கள், கிரிக்கெட் ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை, சவுதி ஜித்தா தமிழ் பிரிமீயர் லீக் அமைப்பினர் செய்திருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.