தஞ்சாவூர் மாவட்டம், பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்பினை அகற்ற எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் சார்பாக தஞ்சாவூர் மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட பண்டிக்கூட் எனும் ரோபோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (04.10.2019) தொடங்கி வைத்தார்.
பண்டிக்கூட் ரோபோவை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை பேசியதாவது:-
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் சார்பில் தஞ்சாவூர் மாநராட்சி பகுதி பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்பை அகற்றிட ரூ.48.40 இலட்சம் மதிப்பீட்டில் பண்டிக்கூட் எனப்படும் ரோபோ இயந்திர கருவி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் துப்புரவு பணியாளர்கள் பாதாள சாக்கடைக்குள் இறங்கி அடைப்புகளை சரி செய்வது தவிர்க்கப்படுவதால், விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படாது. இது தஞ்சாவூர் மாநகராட்சியில் ஒரு புதிய சாதனையாகும். பண்டிக்கூட் ரோபோ பயன்பாட்டின் மூலம் தஞ்சாவூர் மாநகராட்சியல் பாதாள சாக்கடை இணைப்பு பெற்றுள்ள சுமார் 23,653 குடும்பத்தினர் பயன்பெறுவர். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் நிர்வாக இயக்குநர் அனுராக் ஷர்மா, மாநகராட்சி அலுவலர்கள், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.