.

Pages

Sunday, October 13, 2019

அதிராம்பட்டினத்தில் சர்வதேச பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வு பேரணி~ மாணவர்களுக்கான பயிற்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.13
சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி அதிராம்பட்டினத்தில் இன்று (13.10.2019) ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

பேரணியை, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் ஏ.ஆர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தொடங்கி வைத்தார். இப்பேரணி, அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு பழஞ்செட்டித்தெரு, சேர்மன் வாடி, வண்டிப்பேட்டை வரை சென்றது.  இப்பேரணியில், 250 க்கும் மேற்பட்ட அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் எந்தியவாறு சென்றனர். பேரணியின்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

பின்னர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், தமிழகத்தில் விரைவில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் பொதுமக்கள் கன மழை, வெள்ளம், போன்ற பேரிடர் ஆபத்து காலங்களில் தங்களது உயிரையும், உடமைகளையும் காப்பாற்றிக் கொள்வது பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி வண்டிப்பேட்டை ஆலடிக்குளத்தில் நடைபெற்றது. இதில், வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பது குறித்தும் அவர்களை காப்பாற்றும் வழிமுறை பற்றி மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை டிஎஸ்பி சுப்பிரமணி (பொறுப்பு), பட்டுக்கோட்டை பிடிஓ மா.கோபாலகிருஷ்ணன், பட்டுக்கோட்டை தாசில்தார் அருள் பிரகாஷ், அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயமோகன், பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் இரா.சித்தார்த்தன், அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல்.ரமேஷ் உட்பட வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலர்கள், கிராம நிர்வாக உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.