.

Pages

Tuesday, October 15, 2019

அதிராம்பட்டினத்தில் 'இளைஞர் எழுச்சி நாள்' கருத்தரங்கம் (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.15
முன்னாள் ஜனாதிபதி பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில், 'இளைஞர் எழுச்சி நாள்' கருத்தரங்கம் நிகழ்ச்சி, அதிராம்பட்டினம் புதுமனைத்தெரு சம்சுல் இஸ்லாம் சங்கம் வளாகத்தில் இன்று (15-10-2019) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் எம்.அப்துல் ஜலீல் தலைமை வகித்தார். அரிமா சங்க மாவட்ட உயர்கல்விக்கான வழிகாட்டுதல் பிரிவு தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், சங்க நிர்வாக அலுவலர் எம்.நெய்னா முகமது ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

சிறப்பு விருந்தினராக, அரிமா சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் கலந்துகொண்டு பேசியது;
'இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என்ற டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் கனவை, இளைஞர்கள் நனவாக்கி அவருக்கு பெருமை சேர்க்க வேண்டும். மரக்கன்றுகள் நடுதல், அவற்றை பராமரித்தல், பாதுகாத்தல் வேண்டும். நதிநீர் இணைப்பு, மழைநீர் சேகரிப்பு போன்ற அவரது சிறந்த திட்டங்களை நனவாக்க வேண்டும். மாணவர்கள் வாழ்வில் உயர அறம் சார்ந்த கல்வி அவசியம். இவற்றை உணர்ந்து கற்க வேண்டும்' என்றார்.

கருத்தரங்கில், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, ஆக்ஸ்போர்டு மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி, பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

முன்னதாக, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு மாணவர்கள் பதிலளித்துப் பேசினர். சிறந்த பதிலுக்கு சிறப்பு பரிசுகளும், கருத்தரங்கில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கு சான்றிதழும் வழங்கி பாராட்டப்பட்டனர். முடிவில், சங்க செயலாளர் எம்.நிஜாமுதீன் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் அரிமா சங்க நிர்வாகிகள் எஸ்.ஏ அப்துல் ஹமீது, எம். அகமது, குப்பாசா அகமது கபீர், எம். முகமது அபூபக்கர் உட்பட பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.