அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளுர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி, வெளிச்சம் தொலைக்காட்சி ஆகியோர் இணைந்து நடத்திய சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சி அதிராம்பட்டினம் லாவண்யா திருமண மஹாலில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளித்தாளாளர் வீ.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியை பட்டுக்கோட்டை நகர் மன்ற முன்னாள் தலைவர் எஸ்.ஆர் ஜவஹர் பாபு தொடங்கி வைத்தார். இதில், 'சாதாரண மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றுவது, குடும்பச்சூழலா அல்லது சமுதாயச் சூழலா' எனும் தலைப்பில், தொலைக்காட்சி பேச்சாளர் அதிரை அண்ணா சிங்காரவேலு நடுவராகவும், பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், திருச்சி நர்மதா, பிரிலியண்ட் பள்ளி மாணவிகள் ராஃபியா, ஹன்ஷிகா ஆகியோர் ஒரு அணியாகவும், பட்டுக்கோட்டை செந்தில் குமார், புதுக்கோட்டை பாரதி, பிரிலியண்ட் பள்ளி மாணவிகள் ஹேமாஸ்ரீ, ஹேமலதா ஆகியோர் மற்றொரு அணியாகவும் பங்கேற்று பேசினர்.
முன்னதாக, சிறந்த சேவையாளர் விருது மல்லிபட்டினம் ஏ.நாகூர் கனி, பள்ளிகொண்டான் வெங்கடேஸ்வரன், பட்டுக்கோட்டை மேரிஸ் அண்ணாதுரை, நடராஜன், பேராவூரணி குஞ்சர்லன், எஸ்.எஸ் மைதீன்
ஆகியோருக்கு வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை, பத்திரிகையாளர் இல. சிவா செய்திருந்தார். நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பை, முரளி, ஹரீஸ், சரவணன் ஆகியோர் செய்தனர். இந்நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை குயின் சிட்டி லயன்ஸ் சங்கத் தலைவர் முத்துகுமரன், பத்திரிகையாளர் செல்வகுமார், எம்.நிஜாமுதீன், கே.எம்.ஏ ஜமால் முகமது உட்பட பள்ளி மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.