அதிராம்பட்டினம், அக்.02
அதிராம்பட்டினத்தின் பொக்கிஷங்களில் ஒன்று செடியன் குளம். சுமார் 3 ஹெக்டர் 39 ஏர்ஸ் பரப்பளவைக் கொண்டது. மிகவும் பழமை வாய்ந்தது. வரலாற்று சிறப்பு மிக்கது. இக்குளத்தில் நீர் நிரம்பிக் காணப்படும்போது, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார அனைத்து சமுதாயப் பொதுமக்கள் நீராடி மகிழ்ந்து வருவர். மேலும், ஆடு மாடுகள், பறவைகள் நீர் அருந்தி செல்வதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கும் இக்குளம் உதவி வருகிறது.
அதிராம்பட்டினம் பெரிய ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகப் பராமரிப்பில் இருந்து வரும் இக்குளத்தை, ஜமாத் நிர்வாகம் சார்பில், தமிழக அரசின் மழை சேகரிப்புத் திட்டத்தை செயல்படுத்த முன்வந்ததையடுத்து, குளத்தை தூர் வாரி கரையை பலப்படுத்தும் பணி கடந்த ஒரு மாதமாக தீவிரமாக நடந்து முடிந்தது. இப்பணிக்காக ஜே.சி.பி, டிராக்டர் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்நிலையில், கடந்த (செப்.30) திங்கட்கிழமை அதிகாலை அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பலத்த மழை பெய்தது. அதிராம்பட்டினத்தில் மழையின் அளவு 89 மி.மீ பதிவாகியது. குளத்தின் சுற்றுப்புறப் பகுதியில் இருந்து வெளியேறும் மழை நீரை குளத்தில் நிரப்பும் வகையில் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளதால், குளத்திற்கு மழை நீர் மளமளவென நிரம்பத் தொடங்கியது. இதையடுத்து, மழைநீர் நிரம்பிய குளத்தில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் ஆர்வமுடன் குளித்து மகிழ்கின்றனர். மேலும், ஜமாத் நிர்வாகம் சார்பில், குளத்தை சுற்றி மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க திட்டமிட்டுள்ளனர்.
தமிழக அரசின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தி, பிறருக்கு முன்னுதாரணமாகத் திகழும் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கவேண்டும். அரசின் சார்பில், குளத்தை சுற்றி தடுப்புச் சுவர் எழுப்பி, மின் விளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். குளத்தின் பெண்கள் மற்றும் ஆண்கள் குளிக்கும் கரைகளில் படித்துறை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.