.

Pages

Thursday, October 24, 2019

ஏரி வடிகாலில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: கடலில் கலந்து வீணாகும் அவலம்!

அதிராம்பட்டினம், அக். 24
அதிராம்பட்டினம் அடுத்துள்ள தொக்காலிக்காடு, மஹாராஜா சமுத்திர அணைக்கட்டு அக்னியாற்றின் உபரி நீர் வெளியேறி, ஏரிப்புறக்கரை பெரிய ஏரி, சின்ன ஏரி ஆகியவற்றில் நிரம்பி வழிந்து, பின்னர், கிழக்கு கடற்கரை சாலை பிலால் நகர், காதிர் முகைதீன் கல்லூரி, ஏரிப்புறக்கரை கிராம இணைப்பு சாலை (காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி) வாய்க்கால் வழியாக கடலில் வீணாகக் கலந்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக ஏரி வடிகாலை  முறையாக தூர் வாரி, கரையை பலப்படுத்தாததால், தற்போது ஏரியிலிருந்து நிரம்பி வழிந்து கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால், வடிகால் உடைந்து பிலால் நகர் குடியிருப்பு பகுதியினுள் வெள்ளம் புகுந்துவிடும் அபாயம் நிலவி உள்ளது.

எனவே, பிலால் நகர் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துவிடாதவாறு மணல் மூடைகளைக் கொண்டு கரையை பலப்படுத்தும் பணிகளில் பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஏரியிலிருந்து வெளியேறி வரும் உபரி நீர் கடலில் கலந்து வீணாகிறது. இந்த நீரை அருகில் உள்ள குளங்களில் நிரப்பும் பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.