தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசு பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு விண்வெளி கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று(09.10.2019) தொடங்கி வைத்தார்.
கும்பகோணம் அரசு பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு இந்திய வின்வெளி ஆராய்ச்சி கழகத்தின் சார்பில் நடைபெறும் விண்வெளி கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, விண்வெளி கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த விண்வெளி அறிவியல் தொடர்பான கருவிகள் மற்றும் சாதனங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார்.
பின்னர், விண்வெளி கண்காட்சி தொடக்க விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது:-
உலக விண்வெளி வாரத்தினை முன்னிட்டு கும்பகோணம் அரசு பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் சார்பில் நடைபெறும் விண்வெளி கண்காட்சியினை தொடங்கி வைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மாணவ - மாணவியர்கள் விண்வெளி அறிவியலை பற்றி தெரிந்து கொள்வதற்கும், தங்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளும் வகையில் விண்வெளி அறிவியல் தொடர்பான கருவிகள் மற்றும் சாதனங்கள் விண்வெளி கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
விண்வெளி அறிவியல் என்பது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத ஒன்றாகும். தகவல் தொடர்பு, வானிலை கணிப்பு, நாட்டின் பாதுகாப்பு என அனைத்து துறைகளிலும் விண்வெளி அறிவியலின் பங்களிப்பு உள்ளது. எனவே, விண்வெளி அறிவியலை விஞ்ஞானிகள் சார்ந்த துறையாக எண்ணாமல், அனைவரும் விண்வெளி அறிவியலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக துணை இயக்குனர் ரங்கநாதன், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழக நிர்வாகிகள், கும்பகோணம் அரசு பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.