.

Pages

Sunday, October 6, 2019

அதிராம்பட்டினத்தில் நடந்துவரும் 'வாக்காளர் சரிபார்ப்பு திட்டம்' தொடர்பாக...

வாக்காளர்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் தவறேதுமின்றி இடம் பெற்றுள்ளதை சரிபார்த்துக்கொள்ள தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள 'வாக்காளர் சரிபார்ப்பு திட்டம்' தொடர்பாக வாக்காளர்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்தல்!

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி. வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2020 பணியின் துவக்கமாக. வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் (Electors' Verification Programme) என்ற ஒரு புதிய திட்டம் துவங்கப்பட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

இத்திட்டமானது அனைத்து வட்ட அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 15-10-2019 வரை செயல்படுத்தப்படும். எனவே. தஞ்சாவூர் மாவட்ட வாக்காளர்கள் அனைவரும் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இத்திட்டத்தின்படி, வாக்காளர்கள் கீழ்க்காணும் 10 அடையாள சான்றுகளில் ஏதேனும் ஒன்று மற்றும் தங்கள் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றுடன் அருகாமையில் உள்ள வட்ட அலுவலகத்தில் செயல்பட்டுவரும் தேர்தல் பிரிவு அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவிற்கு வந்து தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் சரியாக இடம் பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.

(1) கடவுச்சீட்டு (Passport), 
(2) ஓட்டுநர் உரிமம். 
(3) பணியாளர் அடையாள அட்டை (மத்திய, மாநில அரசுகள் - மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்டது) 
(4) கணக்கு புத்தகங்கள் (வங்கி/அஞ்சலகங்களால் புகைப்படத்துடன் வழங்கப்பட்டவை) 
(5) வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை. 
(6) ஸ்மார்ட் கார்டு (ரேஷன் கார்டு/ஸ்மார்ட் கார்டு (RGI under NPR) 
(7) மின்கட்டணம், குடிநீர் கட்டணம், தொலைபேசி கட்டணம் - சமையல் எரிவாயு ரசீது. 
(8) மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை (மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டது). 
(9) ஓய்வூதிய ஆவணம் (புகைப்படத்துடன் கூடியது). 
(10) ஆதார் அட்டை.

மேலும், வாக்காளர்கள் தங்கள் ஸ்மார்ட் கைப்பேசியின் மொபைல் செயலி (Voters Helpline Mobile App)  மு்லமாகவும் அல்லது www.nvsp.in என்ற இணையதளம் வழியாகவும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் தவறு ஏதுமின்றி சரியாக இடம் பெற்றுள்ளதா என்பதை தாங்களே உறுதி செய்து கொள்ளலாம்.

வாக்காளர் சரிபார்ப்பு திட்டமானது, இந்திய தேர்தல் ஆணையத்தால் வடிவமைக்கப்பட்டு. அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும. இத்திட்டமானது. வருகிற 15-10-2019 வரை அமலில் இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

எனவே. இவ்வாய்ப்பினை தஞ்சாவூர் மாவட்ட வாக்காளர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆ.அண்ணாதுரை. தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.