.

Pages

Thursday, October 10, 2019

காதிர் முகைதீன் கல்லூரியில் நிறுவனர் நாள் விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.10
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில், கல்லூரி நிறுவனர் நாள் விழா கல்லூரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன் வரவேற்றுப் பேசினார்.

விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழக காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கலந்துகொண்டு பேசிய நிறுவனர் நாள் உரையில்; 
சிந்தனையைத் தூண்டுவதற்குத்தான் நாம் கல்வி கற்கிறோம். கல்வியின் பயன் அறிவு, அறிவின் பயன் பண்பாடு, பண்பாட்டை நாம் கற்பிக்கவில்லை என்றால், அந்த கல்வியினால் ஒரு பயனும் கிடையாது. பாடத்திட்டத்தில் ஒழுக்கம் சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

கல்வி ஒன்றுதான் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். எனவே, அதை மனதில் கொண்டுதான் கல்லூரி நிறுவனர் 'கல்வித்தந்தை' ஹாஜி எஸ்.எம்.எஸ் ஷேக் ஜலாலுதீன் அவர்கள் தம் இளம் வயதிலேயே இக்கல்லூரியை உருவாக்கி பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் கல்வி ஒளியை பரவச்செய்துள்ளார். இது அவரது தொலைநோக்குப் பார்வைக்கு எடுத்துக்காட்டு. மனிதர்கள் வாழ்க்கையில் நன்றி மறவாமையை கடைபிடிப்பது அவசியம். மாணவர்கள் பெற்றோர்களை மதித்து, உயர்ந்த கல்வியை கற்று வாழ்வில் உயரவேண்டும்' என்றார்.

கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர் இணைப்புரை வழங்கினார். விழா முடிவில், கல்லூரி பொருளாதாரத்துறைத் தலைவர் பேராசிரியர் பி. கணபதி நன்றி கூறினார்.

இவ்விழாவில், கல்லூரி துணை முதல்வர்கள் எம். முகமது முகைதீன், என்.ஏ முகமது பாருக், எம்.கே.என் மதரஸா அறக்கட்டளை உறுப்பினர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலக, ஆய்வகப் பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.